பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷 தமிழ் இலக்கியங்களில் அறம் 21 : இயலாது. உயிர்கள் அவற்றைத் துய்த்தல் ஊழின்செயல்"முறை வழிப்படுதல் உயிர்கள் யாவும் "ஆற்று நீரில் இயக் கப்படும் மிதவை போலத்தான். இந்தக் கருத்துகளை சான்றோர் நூல்களில் தெளிந்தனம். இதனால் நன்மை யான் மிக்கவரை வியந்து பாராட்டுதலும் செய்யோம்: சிறியோரைப் பழித்தலும் அவமதித்தலும் இலம்’ என்பது இப்பாடலின் பொருள். இத்தகைய இல்வாழ்வு வாழ்ந்து உள்ளம் துறந்த சான்றோர்கள் அக்காலத்தில் பலர் இருந் தனர். இவர்கள் மண்ணாளும் மன்னர்க்கும் மண்ணில் வாழும் மக்கட்கும் அறிவு ஒளியூட்டி வாழ்ந்து அவர் களை நன்னெறியில் உய்த்தனர். இறுவாய் : பாரதக் கதையிலுள்ள ஒரு நிகழ்ச்சியைக் கூறி இந்தப் பொழிவைத் தலைக்கட்ட நினைக்கின்றேன். நச்சுப் பொய்ச் சருக்கத்தின் நிகழ்ச்சியை நாம் அறிவோம். தம்பியர் நால்வரும் ஒருவர்.பின் ஒருவராக வந்து பொய்கை நீர் அருந்திப் பொன்றினர். சந்தன மரத்தின் நிழலில் தாகவிடாயுடன் மூர்ச்சையாய்க் கிடந்த தருமன் தென்றல் வீசியதால் மயக்கம் தெளிந்து எழுந்தான். தாகம் அடிக் கடித் தோன்ற, தம்பியரைத் தேடிக் கொண்டே நச்சுப் பொய்கைக் கரையை அடைந்தான். வீமன் மணவில் எழுதி வைத்த வாசகம் அவன் கண்ணில் பட்டது. தடாக நீர் நஞ்சுடையது எனத் தெரிந்தான். 'போர் செய்ய வரு வார்கள் பாண்டவர்கள்’’ என்று நினைந்து துரியோதனன் செய்த சூழ்ச்சியே இது என்பதையும் ஊகித்து அறிந் தான். இந்த நச்சு நீரையே தானும் பருகி உயிர் நீத்தல் தக்கது என்று நினைந்துக் கயத்தருகில் வந்தான். அறக்கடவுளே நச்சுப் பொய்கையாய் இருந்ததை வில்லி, து நீர் நச்சுச் சுனையால் அச்சுனைசூழ் வரஓர் தொல்மரமாய்