பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212. தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை 'யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே.191 என்று கூறுவார். தருமன் கயத் தருகில் வந்து நீர் பருக முயல்கையில் அசரீரி பேசியது. கயத்து நீர் நஞ்சுடையது. என் சொல் கேளாமல் நால்வரும் நீர் பருகி மாண்டனர். நான் கூறும் உரை கேட்டு பின்னர் நீ நீர் பருகலாம் : என்றது. தருமனும் "நீ சொல்லுவதைச் சொல்லுக' என்றான். அசரீரி : சொல்லும் நூல்களில் பெரியது எது? தருமன்: அரிய மெய்மறைகள். அ: இல்லறத்திற்கு உரியது எது? ஆலோசனை கூறும் இல்லாள். மல்லல் மாலையில் மணம் உள்ளது எது? வண் சாதி. நல்ல மாதவம் எது? தம் குலம்புரி நடையே. (இதையே கீதையில் பார்த்தனுக்குப் பரந் தாமன் சுய தர்மம் என்று விளக்குவான்), .

அ: முனிக்குழாம் தொழும் கடவுள் யார்? த மொய்துழாய் முகுந்தன். அ: மகளிர்க்கு இயற்கை யாது? த : உயர்ந்த நாணம். அ: செல்வர்க்கு அழகு எது? த தகைபெறு தானம். அ. இரு செவிக்கு இனியது எது? த : இளங் குதலையர் இன்சொல் அ: நிலைத்து நிற்பது எது? த நீடு புகழ். அ: கற்பது எது? த : கசடறக் கற்கும் கல்வி. } 9 1 . வி. பா. நச்சுப் பொய்கை -21