பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 213 அ: அனைத்திலும் அற்பமாவது எது? த : அயல் கரத்து ஏற்றல். இந்த நுட்பமான விடைகளைக் கேட்ட அசரீரி அறக் கடவுளாக அவன்முன் தோன்றி காளமா முனிவர் செய்த வேள்வியின் வரலாறு கூறி, தன் மகன் தருமனை ஆரத் தழுவினான். பின்னர் நின் தம்பியர் பிழைப்பதற்கு வழி உண்டு’ என்று கூறி 'நச்சு நீர் பருகி உயிர் துறந்த நால் வரில் ஒருவனை நான் சொல்லும் இந்த மந்திரம் நவிற்றி அழை’ என்று இயம்பினான். தருமனும் அந்த மந்திரத்தை நவிற்றிச் சகாதேவனை எழுப்பினான். அறக்கடவுள் : வீமனையோ பார்த்தனையோ எழுப்பிக் கொண்டால் நினக்கு உதவியாக இருப்பார்களே. அப்படிச் செய்யாமல் சகாதேவனை எழுப்பியதற்குக் காரணம் யாது? தருமன் : என் அன்னை குந்திக்கு நான் ஒரு மகன். என் சிற்றன்னை மாதிரிக்கு ஒருமகன் வேண்டாவோ? அதனால் சகாதேவனை எழுப்பினேன். அதன் பின்னர் அறக்கடவுளும் தன் மைந்தனாகிய தருமனுக்குப் போரில் வெல்ல வல்ல உபாயங்களை விளக்கி வில், அம்பு, வேல் முதலிய ஆயுதங்களையும் நல்கித் தம்பி மார்களையும் உயிர் பெறச் செய்தனன். பின்னர் முன்னர் நடை பெற்ற நிகழ்ச்சிகளைக் கூறி மறைந்தனன். அன்பர்களே, இன்றைய சொற்பொழிவில் இதுகாறும் கூறியவற்றால் அறவுணர்வு வாழ்க்கையில் செயல்படுதல் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டோம். நம் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால் எல்லா நிலை களிலும் அறவுணர்வு குன்றி வருவதையும் காணாமல் இல்லை. நல்லுணர்வுள்ள நாம் எல்லோரும் அறவுணர்வு குன்றாதிருக்கவும், எல்லா மட்டங்களிலும் அதை நி ைல