பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வணக்கம். நேற்றைய .ெ பா ழி வி ல் தமிழ் *இலக்கியங்களில் அறம்’ என்ற பொருள் பற்றிச் சிந்தித்தோம். தமிழர்களின் அறம்பற்றிய சிந்தனை யோட்டம் எவ்வெவ்வாறெல்லாம் பரிணாமப் பட்டுள்ளது. என்பதை ஓரளவு தெளிந்தோம். இன்று தமிழ் இலக் கியங்களில் - நீதி' என்ற பொருள்பற்றிச் சிந்திக்கப் போகின்றோம். அறம், நீதி என்ற சொற்கள் ஒரு பொருள் பயப்பனபோல் தோன்றுகின்றன; அவை வேறு வேறு பொருள்களைத் தெரிவிப்பனபோலவும் தோன்றுகின்றன. நுணுகி ஆராய்ந்தால் அறம் என்பது தரும சாத்திரங்களில் கூறப்பெறும் உண்மை என்பதும்,நீதி என்பது நீதி சாத்திரங் களில் நுவலப் பெறும் உண்மை என்பதும் தெளிவாகும். தரும சாத்திரங்களில் கூறப்பெறும் உண்மைகள் என்றும் மாறாதவை; நீதி சாத்திரங்களில் நுவலப்பெறும் உண்மை கள் காலத்திற்குக் காலம் மாறக் கூடியவை. தரும சாத்திரங் களை இந்திய அரசியல் அமைப்புக் (Constitution of india) கும், நீதி சாத்திரங்களை அவ்வப்போது தேவைக்கும் நடை முறைக்கும் ஏற்ப, சட்ட மன்றங்களில் இயற்றப்பெறும் சட்டங்களுக்கும் ஒப்புமை காட்டலாம். தரும சாத். திரத்தின் உண்மைகள் மாறாதவை என்றேன்; ஆனால் இந்திய அரசியல் அமைப்பிலும் பல திருத்தங்கள் வந்து விட்டன. இந்தத் திருத்தங்களுக்கும் ஏற்பப் பல சட்டங்கள் இயற்றப்பெற்றும் வருகின்றன. மேலும், இந்தச் சட்டங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாது ஆளுங்கட்சிகளின் நோக்கங்களுக்கு ஏற்ப இயற்றப்பெற்று வருவதுதான் அறவழிப் பாதையில் போடப் பெறும் பெரிய தடைக் கற்களாகும். பல நல்ல சட்டங்களும் இயற்றப்பெற்றும் வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். நிற்க. அரசனின் இன்றியமையாமையைப் பண்டையோர் கண்ட முறையை ஒருவாறு ஊகம் செய்து காண்டல் பயன் தரும். பண்டைத் தமிழ்நாட்டில் அருந்தமிழ் மக்கள் ஐந்திணை மருவி வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை