பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 2 ఫ్రో யோருக்குப் பயிர்த் தொழிலே வாழ்க்கையை நடத்துவதற்: கேற்ற வழித்தொழிலாக அமைந்திருந்தது; உயிராய தொழிலாகவும் இருந்து வந்தது. உடல் உண்டி முதற். றாகும் என்று ஒர்ந்திருந்தனர். நிலத்தை வளம்படுத்தி நிறைந்த பயிர் வளர்ச்சியைத் தருவது நீர் என்று தெளிந்: திருந்தனர். நீரின்றி அமையாது உலகம் (குறள் - 20). என்ற வள்ளுவர் கருத்தும் இந்த உண்மையையே வற். புறுத்துகினறது. இன்றியமையாத நீர் வளத்தால் இன்றி யமையாத நெல் முதலிய உணவுப் பொருள்களை சீருற வளர்த்துக் கொண்டு செம்மையாக வாழ்ந்தனர். ஆயினும்: இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வந்தாலும் அவர்கள் வேறு இடையூறுகளையும் சந்திக்க நேர்ந்தது. பகைவரும் வலிமிக்க விலங்குணர்ச்சியாளரும், களவுத்துறை பயின் றோரும் சேமித்து வைக்கப்பெற்ற பொருள்களைத் திருடி யும், சூறையாடியும் தொல்லைகளை விளைவித்தனர். கொடிய விலங்குக் கூட்டமும் உணவுக்காக உண்டாக்கப் பெறும் பயிர் வகைகளைக் கெடுத்தும் அழித்தும் இடை யூறுகளை விளைவித்தன. இத்தகைய துன்பங்களையும் தொல்லைகளையும் இடையூறுகளையும் நீக்கிக் கொள்ள வேண்டிய நிலைமை அவர்கட்கு ஏற்பட்டது; இதற்குரிய கழுவாயைக் காண நீள நினைந்தனர்; ஆழ்ந்து சிந்தித். தனர். இந்த இடையூறுகட்கெல்லாம் இடையூறு செய்து தடையாய் நிற்க வல்ல தனித் தலைவனின் இன்றியமை, யாமையை உணர்ந்தனர். அத்தகைய தலைவன் ஒருவ னைத் தேர்ந்தெடுக்க விழைந்தனர். உடலாற்றல், அறி வாற்றல், காத்தற் பண்பு முதலியவற்றால் மேம்பட்டு நிற்கும் வீர வினைஞனை வேண்டினர். இத்தகுதிகள் அமைந்தவன்தான் தமக்குத் தக்க காவலன் ஆவான் என்று துணிந்தனர். காவலன்' என்ற சொல் ஒன்றே அவர்தம் கருத்தினை அறிவுறுத்தி நிற்கும். இங்ங்னம் அரசனின் இன்றியமையாமையை உணர்ந்தனர் நம் பண்டைய. மூதாதையர். இதனை மோசிக்கீரனார் என்ற சங்கச் சான்றோரின்,