பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌多较 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.” (உயிர்த்து - உயிரை உடையது; மலர்தலை - பரந்த இடத்தையுடைய கடன் - முறைமை) என்ற முழுமுதல் பாட்டால் அறியலாம். இப்படித் தான் உலகில் எல்லாப் பகுதிகளிலுமுள்ள அரச பரம்பரை தோன்றி யிருக்க வேண்டும். உயிரும் உடம்பும் கூடி நின்ற வழியும் உயிருக்குயிராய் நின்றியக்கும் திருவருள் போல அரசு முறை இன்றியமையாதலால், அதனைச் செலுத்தும் தானே உலகிற்கு உயிராதலை அறிகின்றான் அரசன். உயிர் தான் நிற்கும் உடம்புக்கு உளதாகும் நோயை நுகர்ந்தும் அதனைப் பேணுகின்றது. அதுபோலவே, அரசனும் உலகு புரத்தற்கண் உள்ள துன்பம் அனைத் தையும் தான் ஏற்று அதனைக் காக்கின்றான். இதனை அரசன் தன் கடமையாகவே கொள்கின்றான். இழத்தொறுரஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறு உம் காதற்று உயிர் (940) என்று வள்ளுவர் கூறுதலால் உயிரது செயல் நலம் தெளியப்படும். துன்பம் படப்பட உடலோடு வாழும் வாழ்க்கையில் உயிருக்கு ஆசை வளர்கின்றது என்ற உண்மையை இக்குறளின் உவமைத் தெளிவாக்குகின்றது. பெரு நோயாளர்களுக்கும் உயிர் வெல்லமாக இருப்பதால் பிச்சை எடுத்தும் உயிரைக் காப்பதை அறிகின்றோம். பாரதிதாசனின் சைவப்பற்று' என்ற கவிதையில் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலை யாமை என்று துறவு நிலையைப் பேசும் மடாதிபதி, 3, புறம் - 186