பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 罩3型 'மாப்பிள்ளை என்றனுக்கே இத்ததி மரணம் ஏதுக் கென்றார். என்று கூறுவதை எடுத்துக்காட்டிக் கவிஞர் நம்மைச் சிரிக்க வைக்கின்றார். செங்கோலாட்சி செய்யும் மன்னனை வள்ளுவர் பெருமான் இறைவனோடு ஒக்க வைத்துப் பேசுகின்றார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு. இறையென்று வைக்கப் படும் (388) என்ற வள்ளுவம் காண்க. முறை என்பது ஈண்டு அற. நூலும் நீதிநூலும் துவலும் நெறி என்பது பரிமேலழகரின் விளக்கம். அரசனைப் பற்றிய சிந்தாமணி ஆசிரியரின் கருத்து புறநானுாற்றுப் புலவரின் கருத்தை ஒட்டியதாகும். நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீர்உயிர் இரண்டும் செப்பில் புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலம் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்' எள்ற பாட்டில் இதனைக் கண்டு மகிழலாம். மாநிலம் காக்கும் மன்னன் உண்மையான காவலனாக இருப்பின் அவன் அறம் காக்கும். அரசனாகின்றான் என்பது திருத் தக்க தேவரின் கருத்து. மாநிலம் காவலாவான் மன்னுயிர் காக்கும் காலைத் 4. சிந்தா. 2908 (முத்திஇலம்பகம்)