பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதில் ஒரு பெருமித உணர்வு என்பால் எழுகின்றது. இதற்குக் காரணம் இத்திட்டத்தை நிறுவிய டாக்டர் சஞ்சீவி, என் அருமைப் பேராசிரியர் மு. நடேச முதலியார் அவர் களின் அருமருந்தன்ன முதற்குமாரர். நான் (1984-86) திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்ற பொழுது திரு. முதலியார் என் தமிழ்ப் பேராசிரியர். திரு. முதலியாரின் வகுப்பில் மாணாக்கர்கள் ஒழுங்கு முறையைக்கடைப்பிடித்தது போல் எந்தத் தமிழ்ப் பேராசிரியர் வகுப்பிலும் மாணாக்கர்கள் கடைப்பிடித்ததை இன்று வரை நான் எங்கும் கண்ட றிந்ததில்லை. அவர் திறமையுடன் கற்பித்தது ஒருHம் மிருக்க, கட்டுரை எழுதுவதில் அவர் கற்பித்த முறை மிக மிக அற்புதமானது. இன்று எழுதுவது என்னிடம் இரண்டாம் இயல்பாக அமைந்திருப்பதற்கு முக்கிய கார ணம் அவர் தந்த பயிற்சியே என்பது என் அதிராத நம் பிக்கை. மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்த எனக்கு அவர் தந்தை முறையில் நின்று அடிக்கடித் தனிமையில் கூறிய அறவுரைகள் என் சிந்தையில் ஆழப் பதிந்து என் வாழ்க்கையை நெறிப்படுத்தின என்பதை இன்றும் நீள நினைந்து போற்றுகின்றேன். இவையெல் லாம் இன்று என் நினைவில் ஒன்றன்பின் ஒன்றாக எழு கின்றன. மேலும் இப்பேராசிரியப் பெருந்தகை திருச்சி மலைக்கோட்டையில் வாழ்ந்ததும் நினைவுக்கு வந்ததால் தாயுமான அடிகளின் பாடல்களை இறைவணக்கப் பாடல்களாகக் கொள்ளவும் நேர்ந்தது. நிற்க அன்பர்களே, இன்றைய பொழிவில் தமிழ் இலக்கியங் களில் அறம்' பற்றிய கருத்துகள் அமைந்திருப்ப ைத உங்களுடன் சேர்ந்து உரக்கச் சிந்திக்கின்றேன். இவ் வுலகிலுள்ள பொருள்களை உயிர்ப்பொருள்கள், உயிரில் பொருள்கள் என இரு கூறிட்டுப் பேசலாம். உயிர்ப் பொருள்களின் நலத்தின் பொருட்டே உயிரில் பொருள்