பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 22 of சால மறைந்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக் கறவைக்கன்(று) ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் - முறைமைக்கு மூப்புஇளமை இல்.’ |சான்றவர்-அறிவு நிரம்பிய அமைச்சர்கள்; முறைமைசெங்கோன்மை) என்று கூறுவர். சிலசமயம் அமைச்சர்கள் பழைய நிகழ்ச் சிகளை எடுத்துகூறி அடிப்பட்டு வந்தமையால் இது பெருங் குற்றமல்ல என்று கூறுவர். அந்தணர்கள் அல்லது அரச புரோகிதர்கள் பொன்னால் ஆன்கன்று செய்து அவர்க்கே அளித்தால் கறவைக்கன்று ஊர்தலால் ஏற்பட்ட பாவம் தொலையும் என்று கூறி அத்தீவினையினின்றும் அவரைப் பாதுகாக்க முயல்வர். இவற்றையெல்லாம் கருதாது முறை செய்ய வேண்டும் என்பது கருத்து. பராங்குச நாயகி (நம்மாழ்வார்) செல்வம் மிக்க அரசர் களைக் கண்டால் திருமாலைக் கண்டதாகவே சொல்லு வாளாம். திருவுடை மன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டேனே என்றும் (திருவாய் 4 : 4 : 8) என்ற பாசுர அடியை நோக்குக.விஷ்ணுவின் அம்ச மில்லாமல் அரசனாக முடியாது என்பது வைணவ சாத்திர சம்பிரதாயம்: கோஆகி மாநிலம்காத்து நங்கண் முகப்பே மாஏகிச் செல்கின்ற மன்னவரும் - பூமேவும் செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ்பிறப்பும் தண்கமலம் ஏய்ந்தார் தமர்." 8 பழமொழி-242 9. இரண் - திருவந். 69