பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, |கண்முகப்பு - கண் எதிரே; மா - குதிரை, செங்கமல. நாபியான் - திருமால், ஏய்ந்தார் - சமர்ப்பித்தவர்; தமர் . பக்தர்கள்; என்ற பூதத்தாழ்வாரின் பாசுரம் இக்கருத்தினை அரண் செய்கின்றது. புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும். மக்களை உடம்பாகவும் காட்டப் பெற்றது. காரணம், இக்கருத்து அக்காலத்தில் நிலவி வந்ததால். கம்பன் காலத்தில் இக்கருத்து மெல்ல மெல்ல மாறி வந்து மக்கள் உயிராகவும் மன்னன் உடம்பாகவும் மாற்றப்பெற்றிருப் பதால் மக்களாட்சிக்கு வித்திட்டது போன்ற ஒரு புதுக் கருத்தைக் காண முடிகின்றது, தசரதச் சக்கரவர்த்தி நாட்டைப் பாதுகாத்தல் சிறப்பைப்பற்றிக் கூற வந்த கம்ப நாடன், வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்: உயிரெல்லாம் தன் உயிர் ஒம்ப ஒப்பலால் செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்' |அணி - ஆபரணம்; மடங்கல் - சிங்கம் மொய்ம்பு - வலிமை; செயிர் - குற்றம்; சென்றுவாழ் உயிர் . இயங்கும் பிராணிகள்: நின்றுவாழ் உயிர் - இயங்கும். தன்மையில்லாத புல், பூண்டு, மரம் முதலியன) என்று கூறுவான். பிறிதோர் இடத்தில் வசிட்ட்ன் இராமனுக்கு உறுதிப்பொருளைக் கூறும்போது, வையம் மன்னுயி ராக.அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னன்’’. # 0. பாலகா அரசியல்-10 11. அயோ. மந்தரை குழ்ச்சி.11.