பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 225 என்று பேசுவான். இந்த இரண்டு இடங்களிலும் கவிஞன் மாநிலத்தில் வாழும் மக்களை உயிராக்கி விட்டான். மன்னனை அவ்வுயிரைத் தாங்கும் உடலாக்கிவிட்டான். மக்களுக்காக மக்களால் மக்களாட்சி என்று அமெரிக்க நாட்டு ஆப்ரஹாம் லிங்கன் உரிமைக்குரல் எழுப்புவதற்கு முன்னரே கம்பநாடன் மக்களே நாட்டின் உயிர்நாடி என்ற குரலை எழுப்பி விட்டான். கம்பன் காட்டும் கோசலத்தில் அரசர்களாக இருந்தவர்களும் மக்கள் குர் லுக்கு மதிப்புக் கொடுக்கும் மன்னர்களாகவே வாழ்ந்து வந்தனர். உயிர் இல்லாதவழி உடல் இல்லாததுபோல குடிமக்கள் இல்லாதவழி அரசனும் இல்லையாதலின் உலகை அரசனுக்கு உயிரெனக் கூறியுள்ள மதிநுட்பம் மக்களாட்சியின்கீழ் வாழும் நமக்கு ஒரளவு நன்கு புல னாகின்றது. முடி, செங்கோல், முரசு, குடை - இவை அரசர்க்குச் சிறந்த அடையாளங்களாகும். ஒருபாற் கோடாது செவ்விய கோல் போலிருத்தவின் அரசனால் செய்யப் படும் தன்மை செங்கோன்மை’ எனப்பட்டது. இன்று கூட உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் தம் அறையிலிருந்து (Chambers) நீதி வழங்கும் இடத்திற்குச் (Court)செல்லும் போதும், அறைக்குத் திரும்பும்போதும் வெள்ளியாலான தடித்த கோலொன்றைத் தாங்கிய வண்ணம் ஒர் ஆள் அவர் முன்னே செல்வதைக் காணலாம், இது நீதி வழங் குவதற்கு அடையாளம். இன்று நீதிபதிகள்முன் தாங்கிச் செல்வதுபோல் ஒரு கோல் பண்டைக் காலத்தில் அர சர்கள்முன் தாங்கிச் செல்லும் வழக்கம் இருந்திருத்தல் வேண்டும். அறம் துஞ்சும் செங்கோல் (புறம் - 20) அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டம் (புறம் - 35) மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப (புறம் - 42) கோதில் செம்மையில் சான்றோர் பல்கி (புறம் - 117 த. இ. அ-15