பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நமரெனக் கோல்கோ டாது (புறம் 55) அறவோர் புகழ்ந்த ஆகோலன் (புறம் 221) விலங்குபகை கமந்த கலங்காச் செங்கோல் (புறம் 230) என்று கோல்பற்றிய குறிப்புகளைப் பண்டைய இவக்கியங் களில் காணலாம். இவற்றால் செங்கோல் அரசனின் செந் நெறித்தாய பண்பினை விளக்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த அடையாளம் என்பதை அறிகின்றோம். இக்கோல் அழகிய செம்மணிகளாலும் இடையிடையே பதிக்கப் பெற்ற நன்மணிகளாலும் அழகு தரும் ஓர் அணி அன்று. செங்கோவின் அறம் அசைந்து கிடப்பதாகக் கூறப்படு கின்றது. அறக்கடவுளே மேவி ஆராய்ந்தாற் போன்ற ஆராய்ச்சியையுடையது செங்கோல் என்று அறிவிக்கப் படுகின்றது. மெலிதலும் நலிதலும் இன்றிக் குடி மக்களைக் காப்பது என்று கூறப்படுகின்றது. செம்மை சான்ற செங்கோல் உள்ள இடத்து வேந்தன் அல்லவை செய்து காப்பான் என்னும் கருத்தினால் சான்றோர் பல்கு குவர் என்று சாற்றப்படுகின்றது. நமர் எனச் சார்பு பற்றி ஒருபாலமையின் கோல் கோடும் என்று வலியுறுத்தப் பெறுகின்றது. அறநெறிய மக்கள் அறத்தின் திண்மை கண்டு புகழ்ந்துரைப்பர் என்று போற்றப்படுகின்றது. அரசின் செல்நெறியைக் குலைக்கும் கொடிய பகையைத் கடிவதும் குடிமக்களின் கலக்கத்தினைத் தவிர்ப்பதும் ஆகிய பிற செங்கோலின் பண்புகள் என்று பகரப்பெறு கின்றது. இக்கருத்துகளை மேற்காட்டிய சங்க இலக்கியச் சான்றோர்களின் கூற்றுகளினால் தெளியலாம்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சியை, - தண்புனல் பூசல் அல்லது நொந்து "களைக வாழி வளவ!’ என்றுநின் முனைதரு பூசல் கனவினும் அறியாது