பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 7 தமிழ் இலக்கியங்களில் - நீதி புலிபுறங் காக்கும் குருளை போல மெலிவில் செங்கோல் நீபுறங்காப்ப பெருவிறல் யாணர்த் தாகி' (பூசல் - ஒலி, அரவம்; குருளை - குட்டி) என்று வியந்து பாராட்டுவர் இடைக்காடனார் என்ற நல்லிசைப்புலவர். 'நின் நாட்டில் குளிர்ந்த நீர் ஒடையில் செல்லும்போது உண்டாகும் ஒலியல்லது போர்க் காரண மாக நினது படை யுண்டாக்கும் ஒலி கனவிலும் காண (ԼԲւգ Ամո :!. புலி தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல, குறைவில்லாத நின் செங்கோலால் நீ நாட்டைப் பாது காக்கப் பெரிய விசேடத்தையுடைய புது வருவாயை .யுடையது என்பது இப்பாடற் பகுதியின் கருத்தாகும். நாட்டின்பொருள் வளம்: நீதி வழுவா நெறிமுறையில் அரசன் நாட்டு வளத்தைப் பெருக்குதல் அவனது தலையாய கடமையாகும். தமிழகத்தின் சிறந்த முக்கிய தொழில் வேளாண்மை என்னும் பயிர்த் தொழில் ஆகும். இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறமும் நாட்டில் நிலை பெறுவதற்கும், அரசன் வெற்றி பெற்று விளங்கு வதற்கும் வேள்ாண்மை இன்றியமையாதது என்று தமிழர்கள் கண்டனர். இதனால் அக்காலத்தில் தமிழ கத்தை ஆண்ட அரசர்கள் வேளாண்மைக்கு முன்னுரிமை தந்தனர். இதனால் நாடு நீர்வளம் நிலவளம் சிறந்து சான் றோரும் உறையும் வண்ணம் உயர்ந்து நின்றது. ஒரு பெண்யானை படுத்துறங்கும் சிறிய இடத்தில் விளைந்த விளை பொருள்கள் ஏழு களிறுகட்குத் தேவைப்படும் உணவாயிற்று. ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!” (பிடி - பெண்யானை, களிறு - ஆண்யானை) 12. புறம் 42 13. புறம் - 40