பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, இது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடற் பகுதியாகும்; இதனால் அக்கால நாட்டின் நலம் நன்கு விளங்குகின்றது. விளை பொருள்கள் மலிந்து நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியன வாக நிறைந்து செழித்தமையால் வருகின்ற விருந்தினர்க்கு வேண்டும் உணவைத் தந்து அவர்கள் உண்டு மகிழ மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

  • - + q - or w w - - - - - - - b. * * * * * * 4 of அரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும், மறைநர் கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை. நீர்தரு மகளிர்க் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பின் நந்நாட்டுப் பொருந! மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின்நோக் கினரே...'

(அரிநர் - நெல்லறுப்பார்; வாளை - மீன்; யாமை. ஆமை; அறைநர் - கரும்புஅறுப்பார்; வன்புலம் - புன்செய்; மென்புலம் - நன்செய்.j இது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவள வனைப் பாராட்டி இடைக்காடனார் பாடிய பாட்டா கும். ஒரு நாடு நன்னாடாய் விளங்க வேண்டும் எனின் நாட்டில் வாழும் குடிமக்கள் உணவுக் குறைவின்றி வாழ் தல் வேண்டும். உணவே மக்களுக்கு உயிர். இதை நன்கு அறிந்த இன்றைய அரசுகூட பல நியாய விலைக் கடை களை ஏற்படுத்தி எல்லோருக்கும் எளிய முறையில் 14. புறம் - 68