பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 229 உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது; இன்றியமையாத பொருள்களும் தடையின்றி எளிதாகக் கிடைக்கவும் வகை செய்துள்ளது. உணவுப் பொருள் களை ஆக்கும் வன்மையது நீர். நீர் இன்றி அமையாது உலகம் (20) என்பது வள்ளுவர் வாய்மொழி. இப் பெருமானே, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய துரஉ மழை (12) (துப்பார் - உண்பார்; துப்பு - உணவு) - என்றும் கூறியுள்ளார். குழிந்த நிலத்தில் நீரை ஒன்று கூட்டினாலன்றி நெல் முதலியவற்றை வித்தி உணவுப் பொருள்களை ஆக்கிக் கொள்ள இயலாது. ஆதலின் நீர் வளம் பெருகச் செய்தாரோ கடமையுணர்ந்த அரசர் களாவர். இதனைச் செவ்வனே உணர்ந்த அரசர்கள் நீர்வளம் பெருக்கினர். புனிறுதீர் குழவிக் கிவிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்’ (புனிறு - ஈன்றணிமை, இலிற்றும் சுரக்கும் மரம்கரைமரம்; மன்பதை - உயிர்த்தொகுதி, புரக்கும் - பாதுகாக்கும்) என்று கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியைக் குறித்த பாட்டில் கூறுவர். வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சிறப்பிக்குங் கால் அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட’ (புறம்-35) என்கின்றனர். அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல கால் வாய்களாய் ஒடி ஊட்ட என்பது இதன் பொருள். ஈன்ற அணிமையோடு கூடிய குழவிக்கு உயிரை நல்கும் 15. புறம் - 18