பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多蕊母 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உணவாய் அதன் உடல் நிலைக்குத் தக ஊட்டப்படும். தாய்ப்பால்போலக் குடிமக்களின் உணவாம் விளை பொருள்கள் விளைதற்குத்தக நீரைச் சுரக்கின்றது காவிரி, அது பல கால்வாய்களாய் ஒடி நிலத்துப் பாய்ந்து பயி: ருக்கு உயிர் கொடுக்கின்றது. இவ்வண்ணம் நீர்வளம் பெருக்கி நீதியோடு ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள். திருச்சிக்கருகில் கரிகால் பெருவளத்தான் அமைத்த கல் லணையும் அதன் பல கால்வாய்களும் இன்றளவும் இதற்குச் சான்று பகர்வனவாய் நின்று நிலவுகின்றன. அதனைக் கட்டியமைத்த பொறியியல் கலையை அறிவியலடிப்படை யில் பொறியியல் கற்ற அறிஞர்களும் வியந்து பாராட்டு. கின்றனர். நீர்வளம் பெருக்கும் இன்றியமையாத செயலை மேற். காள்ளுமாறு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைக் குடபுலவியனார் பாடிய பாட்டாலும் அறி. கின்றோம். குடபுலவியனார் பாண்டி நாட்டின் மேற் பகுதியில் வாழ்ந்தவர்; அப்பகுதி நீர் நிலையின்றி விளை நிலம் குன்றி வாடுதலைக் கண்டவர். இதனால் அப் பகுதியில் நீர்நிலை அமைக்க வேண்டும் எனப் பாண்டிய னுக்கு உணர்த்துகின்றார். செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ யாகல் வேண்டினும் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன் தகுதி கேள்இனி மிகுதி யாள - நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே: உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே: நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு) உடம்பும் உயிரும் படைத்தசி னோரே,