பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 23 1 வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி யாளும் இறைவன் தாட்கு உத வாதே; அதனால் அடுபோர்ச் செழிய இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம இவண்தட் டோரே; தள்ளா தோர்.இவண் தள்ளா தோரே." (செல்லும் உலகம் - மறுமை உலகம்; ஞாலம் - உலகம்: முருக்கி - கெடுத்து ஒரு நீ ஆகல்-நீ ஒருவனே தலைவனாக ஆதல்; இசை - புகழ், தகுதி - தக்க் செய்கை; உண்டி - உணவு, முதற்று - முதலாக உடையது; உணவின் பிண்டம் உடம்பு; புணரியோர் - ஒருவழிக் கூட்டியோர் படைத்தி சினோர்-படைத்தவர்கள்; புன்புலம்-புன்செய், கண்ணகன் இடம்அகன்ற வைப்பு - நிலம்; நண்ணி - பொருந்தி: இறைவன்-அரசன், தாட்கு-முயற்சிக்கு: வல்லே-விரைந்து: நிலன்நெளிமருங்கு-நிலம்குழிந்த நிலம்; தட்டோர்-தளைத் தோர்; தள்ளாதோர் - தளையாதவர்) என்ற பாடற்பகுதியில் இதனைக் காணலாம். வேந்தே, நீ மறுமைப்பேறாகிய துறக்க இன்பம் வேண்டினும், இம்மைக்கண் ஒரு பேரரசனாய்ப் புகழ் எய்த வேண்டினும், நாட்டில் நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்திவான். நோக்கும் புன்புலம், வேந்தன் முயற்சிக்கு வேண்டுவன உதவா. ஆகவே நீர் நிலை பெருக அமைப்பாயாக’ என்ற அறிவுரையைக் கொண்டதே இப்பகுதி. மூவேந்தரின் ஆட்சிமுறை: சேர, சோழ, பாண்டியர் களின் ஆட்சிமுறைபற்றிச் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன. சோழ நாட்டு ஆட்சி முறையைப்பற்றி வீரபத்தினியாம் கண்ணகி வாய்மொழியாக இளங்கோ அடிகள் பேசுகின்றார். கணவன் அநியாயமாய்க் கொலை 16 , புறம் - 18