பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻32 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யுண்டதைக் கேட்டக் கண்ணகி தலைவிரிக் கோலமாய் அழுத கண்ணிரொடும் ஏந்திய சிலம்போடும் பாண்டியன் முன்சென்று நிற்கின்றாள். அவள் நிலையைக் கண்ட மன்னன், நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோ நீ மடக்கொடி யோய்' என்று வினவுகின்றான். ஊனும் உயிரும் துடிக்கத் தான் வந்த காரணத்தை இன்னும் உய்த்துணராமல் வேந்தன் விளம்பிய வெற்றுபசார மொழிகளைச் செவிமடுத்த வீரக் கண்ணகி, தேரா மன்னா, செப்புவ துடையேன்” என்று பளிச்சென்று மறுமொழி தந்து பேசுகின்றாள். இந்தப் பேச்சில் சோழநாட்டு அறத்தின் வழிநின்ற ஆட்சி முறைக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைத் தருகின்றாள் முதலாவது: சிபி என்பவன் சூரிய வமிசத்துச் சக்கரவர்த்தி. புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகைதன் புகழில்பூத்த அறனென்று திருமணத்தான்' ன்ன்ற கம்பன் கவிதையால் உறுதியாகின்றது. இவன் ஒரு சமயம் வனத்தில் தவம் புரிகையில் தேவர்கள் இவனு டைய தவத்தைச் சோதிக்க நினைத்தனர். இந்திரன் வேட னாகவும் அக்கினி தேவன் புறவாகவும் உருவம் கொண்டு பூவுலகிற்கு வருகின்றனர். அரசன் காண வேடன் புறாவைத் துரத்தி வருகின்றான்.புறா அரசனிடம் அபயம் புகுகின்றது. வேடன் என் இரையைக் கொடுத்து விடு' என்று சிபியைக் கேட்க, அவன் 'அன்பனே, அடைக்கலம் புகுந்த பொருளை ஆதரியாது கைவிடுதல் அதிபாதகமாதலால், இதையன்றி 17. சிலப். வழக்குரை - அடி. 48-49. 18. பால, திருவவதாரப்-64.