பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 233 எதைக் கேட்டாலும் கொடுப்பேன்’ என்கின்றான். வேடன் இப்புறாவின் நிறையுள்ள உன் உடம்பின் இறைச் சியைத் தருக என வேண்ட, அரசனும் அதற்கு மகிழ்ச்சி யுடன் உடன்படுகின்றான், துலாக்கோல் ஒன்றன் தட்டில் புறாவை நிறுத்தித் தன் உடம்பிலுள்ள உறுப்பு களையெல்லாம் ஒவ்வொன்றாக அறுத்து வைத்தும் எடை குறைந்தமையால் முடிவில் தானே தராசுத் தட்டில் ஏறி எடையை நிறுத்து ஈடு கட்டுகின்றான். உடனே இருதேவர் களும் உண்மை வடிவுடன் வெளிப்பட்டுச் சிபிச் சக்கர வர்த்தியைக் கொண்டாடி அவன் உடலில் தசை வளரச் செய்து வேண்டின வரங்களையும் அளித்தனர் என்பது புராண வரலாறு. இந்தச் சிபியைச் சோழ அரசனாகக் கொள்வர் இளங்கோ அடிகள். இந்த வரலாற்றைக் கண்ணகி, எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப புள்ளுறு புன்கண் தீர்த்தோன்' (எள்ளறு - இகழ்தலற்ற புன்கண் - துன்பம்) என்று இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றாள். இந்த வரலாறு சில புராணங்களில் வேறுவிதமாகவும் காணப்படுகின்றது. யமனும் அக்கினியும் முறைதே வல்லு நாகவும் புறாவாகவும் வந்தனர் என்பதும் ஒரு வரலாறு இந்த வரலாற்றின் அடிப்படையில். கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக.?? 19. சிலப். வழக்குரை-அடி 51-52 20. புறம்-43.