பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23垒 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, (கொடுஞ்சிறை - வளைந்த சிறகு; கூர் உகிர் - கூரிய மூக்கு ஏறுகுறித்து - எறிதலைக் கருதி, ஒரீஇ-தப்பி; அகம் - இடம்: புக்க - அடைந்த; தபுதி - அழிவு சீரை - துலைத்தட்டு; உரவோன்.வலிமையுடையவன்; என்ற புறப்பாடல் எழுந்தது. இது சோழன் நலங்கிள்ளி யின் தம்பி மாவளத்தான்மீது தாமல் பல்கண்ணனார் Lissio-tis ol. இரண்டாவது எடுத்துக்காட்டில் மனுநீதிச்சோழனின் வரலாறு வருகின்றது." திருவாரூரைத் தலை நகராகக் ஆண்டு வந்தவன் மநுநீதிச் சோழன். ஒரு சமயம் பசு வொன்று ஆராய்ச்சி மணியைப் பற்றி அடிக்கின்றது. அதன் கன்று அரசகுமரனின் தேர்க்காலில் சிக்கி உயிர் இழந்ததை அறிகின்றான் அரசன். தன் எதிரே மகனைத் தேர்க்காலில் இட்டு தன் நீதி வழுவா நெறியினை உல. கிற்கு உணர்த்துகின்றான். இந்த வரலாற்றை, வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியில் மடித்தோன்' (நடுங்க - அசைய; ஆவின் கடைமணி - பசுவின் கண் மணியின் கடை, உகுநீர்-ஒழுகும் நீர்) என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறுகின்றாள் கண்ணகி. இத்தகைய சோழர் மரபு ஆண்டது சோழநாடு என்று சோழநாட்டின் நீதிமுறையைத் தெரிவிக்கின்றாள். அற. நெறி பிறழ்ந்த மன்னனுக்குத் தன் நாட்டின் அறமணம் கமழும் புகழை எடுத்துக் கூறுகின்றாள். பாண்டி நாட்டின் ஆட்சி முறையை மதுராபுரித் தெய் வத்தின் வாய்மொழியாக எடுத்துக் காட்டுகின்றார் 21. இதைப் பெரிய புராணத்திலும், வள்ளலாரின் திருவருட்பா உரைநடைப் பகுதியிலும் விரி GYi FF GG GIT 65ðf{G}) FT LÊ, 22. சிலப். வழக்குரை காதை-அடி (53-55)