பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 235 இளங்கோ அடிகள். கொற்கைத் தலைவனாய், குமரித் துறைவனாய், பொற்கோட்டு இமயவரம்பனாய்,பொதிகை மலைக்கிழவனாய் விளங்கிய பாண்டியன் குலத்தை பண்டு முதல் காக்கும் தெய்வம் மதுராபதி. இவளே ஆலவாயின் ஆதி தெய்வம். மறைந்த மாறனின் குலதெய்வமும் இந்த மதுராபதியே. இந்தத் தெய்வமே தன் நாட்டு வேந்தர் மரபின் விழுப்புகழை எடுத்தோதுகின்றது. பெருந்தகைப் பெண்ணரசியே, மதுரை மாநகரில் யான் அந்தணரின் மறை, நாவோசையைக் கேட்டறிவேனேயன்றி ஆராய்ச்சி மணி நாவோசையை என்றும் கேட்டறியேன். பாண்டியனின் பகை மன்னரேயன்றி அவன் குடிமக்கள் எந்நாளும் பழி துற்றியதைக் கேட்டறியேன். அத்தகைய செங்கோலோச் சியவன் அவன். இன்னுங்கேள்: மடந்தையரின் மடங்கெழு நோக்கால் நெஞ்சாகிய களிறுகட்கு மீறி காம்வெறி கொண்டு கைக்கடங்காது போதல் கூடும். இந்த நிலை யிலும் பாண்டியர்கள் ஒழுக்கந்தவறி இழுக்குடைய செயல் களில் இறங்கியதில்லை. அத்தகைய சிறந்த குடிப்பிறப்பு' அவர்தம் பாரம்பரியப் பண்பாக இலங்குகின்றது’ 'இன்னும் கேட்டி' என்று மதுராபுரித் தெய்வம் கிரந்தை என்ற ஓர் ஏழை அந்தணனின் வாழ்வில் நேரிட்ட நிகழ்ச்சியொன்றினைக் கூறுவாள். இந்த அந்தணன் ஒரு சமயம் காசித் திருத்தலப் பயணத்தை மேற் கொண் டான். அஃதறிந்த அவனுடைய இல்லக் கிழத்தி கண்கலங் கினாள். 'என் ஆருயிர்த் துணையே, அச்சம் வேண்டா. பாண்டியன் நல்லாட்சி நின்னைக் காக்கும். அதனினும் சிறந்த காவல் வேலி இல்லை என்று ஆறுதல் கூறிச் செல்லுகின்றான். மறையோன் தன் மனையாளுக்கு மொழிந்த ஆறுதல் மொழியை நகர் சோதனைக்காக நள்ளிரவில் வேற்றுருவுடன் வந்திருந்த மன்னன் எவ் வாறோ கேட்டிருந்தான். அன்று முதல் அரசன் அப்பார்ப் பனன் இல்லத்திற்கு ஏதம் எதுவும் நேரா வகையில் கண் 23. சிலப் கட்டுரைக் காதை - அடி 31 - 34; 40 - 41.