பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை காணித்து வந்தான். நாட்கள் பல உருடோடின. ஓரிரவு நகர் சோதனைக்கு வந்த வேந்தன். கீரந்தை இல்லத்தில் பேச்சரவம் எழுந்ததைக் கவனித்தான்; சற்றே ஆராயாது கதவைத் தட்டினான். திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்த கீரந்தை கள்வனோ என ஐயுற் றான். அன்று பாண்டியன் ஆட்சி நம்மைப் பாதுகாக்கும் என்றீர்களே! இன்று அது காவாதோ?’ என்றாள் அந்தணன் மனைவி. இப்படி விபரீதம் நேரும் என்பதை உணர்ந்த முன்னன் அக்கம் பக்கத்திலுள்ள பல வீடுகளின் கதவு களையும் தட்டி விட்டு அரண்மனையை அடைந்தான். 'மறுநாள் கதவு தட்டப்பெற்ற இல்லங்கட்குரிய வர்கள் யாவரும் மாறன்முன் சென்று தம் இல்லத்துக் கதவினைக் கள்வன் தட்டினதாக முறையிட்டனர். மக் களின் முறையீட்டினைக் கேட்ட மன்னன், கதவைத் தட்டின கள்வனைத் தண்டிப்பேன்’ என்று கூறி உள்ளே சென்றான்; துண்டித்த கையனாய் வெளியில் வந்து, "இதோ கதவைத் தட்டின கைக்குத் தண்டனை' என்று கூறினான். இதனைக் கண்டு கீரந்தையும் ஏனையோரும் பதைபதைத்தனர். எங்கள் வேந்தன் கையோ வெட்டுண் டது! வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் உச்சியில் வளை யுடைத்த எங்கள் மன்னன் கையோ துண்டாவது!’ என்று உயிர் துடித்தனர். கையிழவாக் காவலனோ கை இழப் பது!’ என்று கலங்கிக் கதறினர். மக்கள் யாவரும் ஒன்று கூடி பாண்டியனுக்குப் பொற்கைப் பூட்டினார்கள். "பொற்கைப் பாண்டியன்’ என்று பெயர் பெற்றுத் திகழ்ந் தான் பாண்டியன், இத்தகைய மேலோர் மரபு பாண் டியர் மரபு’’ என்று கூறினாள் மதுராபுரித் தெய்வம்.”* இந்த வரலாறு பழமொழி என்ற நூலிலும் குறிப் பிடப்பெற்றுள்ளது. 24. சிலப். கட்டுரைக் காதை - அடி (42-53)