பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கலன்களைப் பெற்றுக்கொண்டு தன் ஊர் நோக்கி மீண்டு வருபவன் திருத்தங்கால் (தண்கால்): என்ற ஊரில் அரச மரத்தையுடைய ஒரு மன்றத்தின்கண் தங்கி இளைப் பாறுகின்றான். தன் ஊன்றுகோல், குண்டிகை, வெள்ளைக் குடை, சமித்துகள் இவற்றையும், பரிசிலாகப் பெற்று வந்த பண்டங்களையுமுடைய ஒரு சிறிய மூட்டையையும் நடையனையும் (பாதக் காப்பு) தன் அருகில் நிலத்தின் கண் வைத்து இளைப்பாறுகின்றான். இளைப்பாறுகின்றவன் வாளா இருக்க வில்லை, பரி. சில் நல்கிய சேரவேந்தனைப் பலவாறு வாழ்த்துகின்றான். அந்த வாழ்த்தொலியைக் கேட்டு அம்மன்றத்தின்கண் விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறுவர்கள் அப்பரா சரனைச் சூழ்ந்து கொள்ளுகின்றனர். அந்தணன் அச்சிறு வர்களை நோக்கி, பிள்ளைகாள், தும்மில் எவரேனும் என் னோடு சேர்ந்து மறையினை ஒதவல்லிராயின் இச்சிறிய மூட்டையைப் பரிசிலாகப் பெறுவீர்” என்று அறிவிக் கின்றான். உடனே வார்த்திகன் என்ற அந்தணனின் செல்வ மகன் தட்சிணாமூர்த்தி என்னும் சிறுவன் மறையின் ஒலி சிறிதும் வழுவாத வண்ணம் மிக்க மகிழ்சியுடன் அப்பர்ா சரனுடன் நன்கு பொருந்த ஒதுகின்றான். அச்சிறுவனின் திறமைக்கு மெச்சி முத்துக் கோவையாகிய பூணுாலும் - سسسسسسسسسسسسسسسسسسسسسسسر 27. திருத்தங்கால்: இது திருத்தண்காலூர் என்றும் வழங்கப் பெறும். இது சிரீவில்லிபுத்துார் - விருது நகர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றுார். வைணவ திவ்விய தேசங்கள் 108 இல் இதுவும் ஒன்று. 1969-ஜூனில் என் குடும்பத்துடன் சேவித்தலம். பாண்டி நாட்டுத் திருப்பதிகள் -'திருத் தண்காலூர் அப்பன் என்ற 8-வது கட்டுரை யில் இந்தத் திவ்விய தேச விளக்கம் தரப் பெற்றுள்ளது.)