பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 2.3% அதற்கேற்ப அணிகலன்கள் பிறவும் கைக்குக் கடகமும் காதிற்குத் தோடும் ஆகிய இவற்றுடன் தான் கொணர்ந்த பண்டச் சிறுபொதியையும் அச்சிறுவனுக்கு வழங்கு கின்றான் பார்ப்பன வாகை பெற்ற அப்பராசரன். தட்சிணா மூர்த்தியின் குடும்பம் செழிப்புடன் இருக்கும் நிலை கண்ட அவ்வூரில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் பொறாமை கொள்ளுகின்றனர். அரசியல் முறைக்கு மாறாகப் புதையற் பொருளைக் கவர்ந்து கொண்டவன் என்று வார்த்திகனைப் பிடித்துக் காவலில் வைக்கின் றனர். பின்னர் அவனைச் சிறைக் கோட்டத்தின்கண் இடுகின்றனர். அந்த வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அச்செயல் கண்டு பெரிதும் வருந்தி நிலத்தில் வீழ்ந்து புரண்டு, சினத்தினால் பொங்கிப் பாண்டியன் செங்கோலையும் வெறுத்துப் பேசுகின்றாள். கார்த்திகை என்னும் பத்தினிப் பெண்ணுக்கு உற்ற நிலைமை கண்டு மதுரையிலுள்ள கொற்றவை (ஐயை) என்னும் கோயிலின் சிற்பக்கதவு திறக்கப்படாத நிலையை அடைகின்றது. இதைக் கேட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் தன் ஏவலரை வருவித்து இந்நிலையை ஆராயுமாறும் தனது ஆட்சியில் செங்கோன்மைக்கு மாறான செயல் நிகழ்ந்த துண்டோ என்பதைக் கண்டறியுமாறும் பணிக்கின்றான். அப்பணியாளர் ஒற்றர்கள் மூலம் அனைத்தையும் அறிந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்து அவனை அரசன் முன் கொணர்ந்து நிறுத்தி உண்மையைக் கூறுகின்றனர். அரசன் தன் பணியாளரால் நேர்ந்த தவற்றினுக்கு மிகவும் வருந்தி அவனுக்குப் புகழுரை பல சொல்லித் தம் அர சியல் முறை பிழைத்தமைக்குப் பொறுக்குமாறு அவ்வந் தணனை வேண்டுகின்றான். மேலும் நீர்வளம் நிலவளம் மிக்க அவ்வந்தணன் பிறந்த ஊராகிய திருத்தங் காலையும் குறையாத விளையுடைய வ ய லூ ர் என்றும் ஊரினையும் அப்பார்ப்பனனுக்கு முற். நூட்டாக வழங்குகின்றான். பின்னர் அவ்வந்தணனையும்