பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24伊 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கற்புடைத் தெய்வமாகிய கார்த்திகையையும் தன் மார்பு நிலத்தில் பட வீழ்ந்து வணங்கி தன் அரசு செய்த பிழை யைப் பொறுத்தருளுமாறு வேண்டுகின்றான். கொற்றவன் கழுவாயாக மேற்கொண்ட செயலால் கொற்றவை மனம் குளிர்ந்தாள். அடைத்த கதவும் திறந்ததை நகர மக்கள் அறிந்தனர். பாண்டியன் இம்மட்டோடு அமையவில்லை. மதுரை மாநகரில் நீண்ட தெருக்களில் உள்ள மலையின்ை யொத்த உயர்ந்த மாளிகைகள் எங்கணும் கேட்கும் வண் ணம், சிறைகளைத் தூய்மையாக்குங்கள்; ஏதாயினும் குற்றம் செய்தோர் அக்குற்றம் நீங்கி மாசறச் செய்யுங்கள்: (Amnesty). பிறர் ஈந்த பொருள், கண்டெடுத்த பொருள், உழைப்பால் ஈட்டிய பொருள் ஆகிய இவை இவற்றைப் பெற்றோர்க்கு உரிமையாம்' என்று யானை மீதேறி முரசறைவிதான் கோன்முறை வழுவாக் கொற்ற வேந்தன்.”** இவ்வாறு இளங்கோ அடிகள் நீதிபற்றிய இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் இலக்கிய நயம் பெறச் செய்து நிலைபெறச் செய்து விட்டார். . ஆராயாது செய்த குற்றத்திற்கு வருந்திப் பாண்டியன் உயிர்துறக்கின்றான். உத்தம நங்கையாகிய பாண்டிமா தேவியும் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில் என்று கூறி மன்னன் இணையடி தொழுது வீழ்கின்றாள்; அவள் உயிரும் போய் விடுகின்றது. LITT೧೯T செல்வழிச் செல்க யான்எனத் தன் உயிர் கொண்டு.அவன் உயிர்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனன். வல்வினை வளைத்த கோலை மன்னவன் சொல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது? 28. சிலப். கட்டுரை காதை - அடி 55 - 131. 29. சிலப். காட்சி காதை - அடி 84 - 86 ; 98 - 99