பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 24f என்று இளங்கோ அடிகளும் ஊழின்மீது பாரம்போட்டு அமைதி காட்டி விடுகின்றார். இனி, சேரவேந்தர்களின் நீதி உணர்வு பற்றியும் குறிப்பு உள்ளது. அதனையும் காண்போம். இரு சாராரும் உடன்று எழுந்த பாரத அறப்போரில் - இக்காலத்தில் நடு நிலையுடன் செயற்படும் செஞ்சிலுவைச் சங்கம்போல்நடுநிலைமை தவறாது நீதியைப் போற்றும் முறையில் இருதரப்பினருக்கும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கியவன் சேரன் உதியஞ்சேரல் என்ற பெருமகன். இவன் உதியஞ்சேரல் வழியினர், அந்துவஞ் சேரல் இரும்பொறை வழியினர் என்ற இரு வழி யினரில் முதல் வழியினரின் முதல் பெருமகன். இருதிறச் சேனைக்கும் வரையாது உணவு வழங்கியதால் இவன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சிறப்புடன் இலக்கியத்தில் போற்றப்படுகின்றான். நடுவு நிலைமையுடன் செயற்பட்டவன் இப்பெருமகன். பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமையே நடுவு நிலைமை என்று விளக்குவர் பரிமேலழகர். பாரதப் பெரும் போரில் நம்மவர் பிறர் என்ற பாகுபாடு கருதா மல் அறம் எல்லோர்க்கும் பொதுவானது என்ற உணர் வுடன் செயற்பட்டதால், அவன் வாழ்ந்த காலத்தில் விளங்கிய புகழாலும் அவன் காலத்திற்குப் பின் இன்ற ளவும் அவனுடைய எஞ்சி நிற்கும் புகழாலும் அவன் போற்றப்படுகின்றான். ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன்' 30. நடுவு நிலைமை - அதிகார விளக்கம். 31. சிலப். வாழ்த்துக் காதை - ஊசல்வரி. 24 த.இ.அ-16