பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 7. என்று ஒதியவற்றானும் இதனை நன்கு அறியலாம். இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே டாக்டர் மு. வ. தமது திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்ற தம் அருமையான நூலில் நூற்பொருளைத் திருக்குறளில் காணப்பெறுவது போல் அறம், பொருள், இன்பம் எனப் பகுத்தோதாது இன்பம், பொருள், அறம் எனப்பகுத் தோதினார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. இந்த அமைப்பைத் தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் பலப் படப் பாராட்டியிருப்பது(அணிந்துரையில்) நம் கவனத்தை ஈர்க்கின்றது. உறுதிப் பொருள்கள்: இந்நிலவுலக வாழ்வில் மக்கள் எல்லோரும் அடைதற் கரிய உறுதிப் பொருள்களை அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் பாகுபடுத்திக் கூறுவதை நாம் அறிவோம். எல்லா உயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம்; அந்த இன்பத்திற்குக் காரணமாக அறிவுடைய மக்களால் ஈட்டப்படுவது பொருள்; பிறர்க்குத் தீங்கு நினையாத மாசற்ற மனத் தால் பொருள் செய்தொழுகும் முறை அறம். நுகர்தல், வேட்கைமுறைபற்றி இன்பம் - பொருள் - அறம் @了@ö” 'இன்பமும் பொருளும் அறனும்’ என்ற மேற்காட்டிய நூற்பாவால் வகுத்துக் காட்டினார் தொல்காப்பியர். செய்கை முறை பற்றி அறம்-பொருள்-இன்பம் எனவும் எண்ணுதல் மரபு. இம்முறையில் எண்ணுவதை, - அந்நிலை மருங்கின் அறம்முத லாகி மும்முதல் பொருட்கும் உரிய என்ப." என்று கூறுவர் தொல்காப்பியர். வீட்டினைப் பற்றித் தொல்காப்பியர் தனியாக எடுத்தோதவில்லை. உலகின் 5. செய்யு. 106. (இளம்)