பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைம்ை என்று வாழ்த்துரைக் காதையில் குறிப்பிடப் பெறுகின் றான். இவன் மரபில் வந்தவன் இமயவரம்பன் தம்பி யாகிய பல்யானைச் செல்கெழு செங்குட்டுவன்; இவன் வீரத்திருவினன்: அறநெஞ்சினன், ஈகைப் பண்பு நிறைந் தவன். இவன் பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் தன்னைப் பாடிய பாலைக் கெளதமனார்க்குக் குட்டுவன் துறக்கம் அளித்த வரலாறு கூறப்பெற்றுள்ளது. பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை, குலவுவேற் சேரன் கொடைத்திறன் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலாதன் காண்குஎன82 (திருநிலை - செல்வநிலை; பெருநாள் இருக்கை . பெருமை மிக்க காலை ஒலக்கம்; மறையோன். பாலைக் கெளதமனார்: சேரலன் - இமய வரம்பன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன்) ஈண்டுப் பெருஞ்சோறு பயந்த' என அக்குலத்து முன் னோன் செய்கை அவன்மேல் ஏற்றிக் கூறப் பெற்றது. இந்தக் குட்டுவனிடம்தான் பராசரன் என்ற சோழ நாட்டுப் பார்ப்பனன் பரிசில் பெற்றது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன், அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்: 32. சிலப். கட்டுரைக் காதை - அடி 55-56; 62.64 33. புறம் - 1