பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 2堕剑 எனப் புறப்பாட்டிலும் இவன் போற்றப்பெறுவதைக் காண லாம். மேலும் சிலம்பிலேயே இவன், நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்?* [நான் மறையாளன் - பாலைக் கெளதமனார்:செய்யுள் பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்து; மேல் நிலை உலகம் -துறக்கம்) என்று சிறப்பிக்கப் பெறுகின்றான். இவனைப் பாடிப் பெற்ற பரிசில்: நீர் வேண்டியது கொண்மின் என, யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும் என, பார்ப் பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட் பிக்க, பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் பார்ப் பணியையும் காணாராயினர்.’’ என்பதனால் அறியலாம். இவன், இந்நூலில் பின்னுமோர் இடத்தில் உவமையாகவும் சுட்டப்பெறுகின்றான். முடிபுறம் உறிஞ்சும் கழற்கால் குட்டுவன் குடிபுறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க?" (முடிபுறம் - மன்னரது முடியின் புறம்; உறிஞ்சும் - தேய்க்கின்ற; குடிபுறம் தருதல் - குடிகளைக் காத்தல்; திருமுகம்-அழகிய முகம்; மலர்கதிர் - விரிந்தகதிர்) குடிகளைக் காக்கும் காலத்து விளங்கும் அரசனது திருமுகத்தை யொப்ப விரிந்த கதிர்களை யுடைய மதியம் இருந்தது என்பதாகக் கூறுவர் கவிஞர். மற்றைய அரசர் இவன் அடிக்கண் தம் முடி பொருந்தத் 34. சிலப் : நடுகற் கதை - அடி 137 - 8. 35. பதிற் : மூன்றாம் பத்து - பதிகம் காண்க. 36. சிலப் : நடுகல். அடி 37 - 40.