பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻4盛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தலைவணங்கலான் அம்முடியினைக் கழல் தேய்ப்பதா யிற்று. உவமப் பொருள் உவமிக்கப்படும் பொருளைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது இலக்கணவி இ. உயர்ந்தன் மேற்றே உள்ளும் காலை87 என்பது தொல்காப்பிய விதி. எனவே, வேந்தனின் முக மலர்ச்சி மலர கதிர்மதியத்தை விடப் பொலிவுற்று விளங். கியதாகக் கூறப்பெற்றுள்ளது. சேரன் செங்குட்டுவனின் நீதி உணர்வுபற்றியும் சிலப். பதிகாரத்தால் அறியமுடிகின்றது. இயற்கை வளம் செறிந்த மலை நாட்டில் மலை வளம் காணப் புறப்படு: கின்றான் சேரன் செங்குட்டுவன் தன் துணைவி இளங்கோ வேண்மாளுடனும் அரசச் சுற்றத்துடனும். அப்பொழுது தண்டமிழ்ச் சாத்தனாரும் அருகில் இருக்கின்றார். மலை. வாழ் குறவர்பெருமக்கள் கணக்கற்ற பொருள்களுடன் காவலனைச் ச ந் தி க் கி ன் ற ன ர் . .ே வ ங் ைக மரத் தடியில் காரிகை ஒருத்தி வானவர் போற்ற வானகம் பெற்ற செய்தியைத் தாம் கண்டதாகக் கூறுகின்றனர். அப்பொழுது அருகிருந்த புலவர் பெருமான் சாத்தனார் கண்ணகியின் வரலாறு முழுவதையும் எடுத்துரைக்கின்றார். கண்ணகி வரலாற்றுடன் நெடுஞ்செழியன் வரலாறும் குறிப்பிடநேர்கின்றது. அப்போது அவன் வருந்தி உரைத்த அமுத மொழிகள் தமிழினம் பெருமையோடு உலகிற்கு எடுத்துக்காட்டக் கூடிய பொன்மொழிகளாகும். சேரர் கோன் பேசியது: எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்ந்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது! 37. தொல் : உவமயியல் - 3.