பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 245 மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் குடிபுர உண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக இல்' இந்த அமுத ஊற்றில் சேரவேந்தனின் ஆட்சியில் குடி மக்கள்பால் அவன் கொண்டிருந்த அற உணர்வு - நீதி உணர்வுவெளிப்படுகின்றதைக் காண்கின்றோம். திே வழங்கல் : திருவள்ளுவர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்பும் பின்பும் முடியாட்சியே நடைமுறை யிலிருந்தது. இந்தக் காலங்களில் நீதி வழங்குவதைச் சில சமயம் அரசனே மேற்கொண்டிருந்தான். ஆனால், நீதி வழங்குவதற்கு அறங்கூறு அவையங்களும் இருந்தன என்ப தற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியில் அறங்கூறு அவையம்’ என்று ஒன்று இருந்ததாகக் குறிப்பு உள்ளது.* புறநானூற் நிலும் 'அறன்நிலை திரியா அன்பின் அவையம் (புறம்-71) மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம் நின்று நிலையிற் றாகலின் (புறம்-39), மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாதாங்கு” {நற்-400), அறங்கெழு நல்லவை' (அகம்-93), முறை யுடை அரசன் செங்கோல் அவையத்து (குறுந் 276), அறங்கூறு அவையம் (சிலப் 5 ; 135) என்ற குறிப்புகளால் இத்தகைய அவையங்கள் இருந்தமை பெறப்படுகின்றன. அரசன் நீதி வழங்கினும் அற நூல்களின் அடிப்படையைக் கொண்டே வழங்கியதாக அறியக் கிடக்கின்றது. அரசனே நேர் நின்று நீதி வழங்கினான் என்பதைப் பழமொழியிலுள்ள ஒரு பாடலால் அறிய முடிகின்றது. பாடல் கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ வேந்தனைப் பற்றியது. ஒரு சமயம் முதியோர் இருவர் தம்முள் மாறு 38. சிலப். காட்சிக் காதை, அடி 95-194 39. மதுரைக். அடி 49.2.