பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பட்டு வழக்கைத் தீர்ப்பிக்கும் பொருட்டு இவனிடம் வந்: தனர். இளம் பிராயத்தானான இவனைக் கண்டு இவன் இளையன்; வழக்கின் முடிவை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன்' என்று கருதினர் முதியோர். இதனைக் குறிப் பால் உணர்ந்த கரிகாலன் அவர்களை மறுநாள் வருமாறு: பணித்தான். தானும் மறு நாள் முதியவன்போல் வேடம் பூண்டு நரைமுடியுடன் அவைக்கு எழுந்தருளி திே வழங், கினான். இதனை, உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்." - - (சோழன் - கரிகாலன்) என்ற பழமொழிப் பாடலால் அறியலாம். இரு திறத்தாரும் உரைத்தலின் உரை வழக்கு’ எனப்பட்டது. குற்றமுடை. யாராய்த் தண்டிக்கப் பட்டோரும், அரசன், வழக்கினை ஆராய்ந்து நீதி கூறி அறிவு கொளுத்தும் முறையைக் கண்டு. மனம் மகிழ்ந்தார்கள் என்பதை நரைமுது இருவரும்) உவப்ப முறை செய்தான்' என்றார். கார்கள் முதலிய பிற காரணங்கள்கொண்டு ஒரு. வழக்கினை முடிவு செய்தலினும் வழக்கு தொடுத்தவர் களின் சொற்களைக் கொண்டே தீர்ப்புக் கூறுதல் நுண் ணுணர்வின்பால் பட்டது. முறை செய்தல் - ஒருபாற். கோடாது கோலோச்சுதல்; அறநூலும், நீதிநூலும் சொல். லும் நெறியின் அடிப்படையில் நீதிசுறுதல். வழக்கு. தொடுத்தோர் (1) உரை முடிவு காணான் (2) இளை யோன் என்ற இரண்டு குறைகளை அரசன்பால் கண்ட னர். இந்த இரண்டு குறைகளையும் (1) முதியவன்போல் கோலம் கொண்டு சொல்திறமையினாலும் (2) நரை முடித்தலாலும், இளமையை மறைத்தலாலும் நிறைவு செய்தான் சோழவேந்தன். - இருசாரா 40. பழமொழி 6 (கழகப் பதிப்பு)