பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 盛4? அரசனால் செய்யப்படும் முறையினது தன்மையைச் செங்கோன்மை என்பார் பரிமேலழகர். அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல்போல் இருத்தலின் செங் கோல் எனப்பட்டது. வடநூலாரும் இதனைத் தண்டம் என்று குறிப்பர். ஒர் அரசன் தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நன்கு ஆராய்ந்து எந்த ஒரு பக்கமும் சாயாது நடுவு நிலைமையுடன் அக்குற்றத்திற்குச் சொல்லப்பட்ட தண்டனையை நூலோரோடு அவ்வளவிற் றாகச் செய்வதே முறை. ஒர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (541) (ஒர்ந்து - ஆராய்ந்து; கண்ஓடுதல் - ஒரு பக்கம் சாய்தல்? என்பது வள்ளுவம். பண்டைத் தமிழரசர்கள் நீதியை, என்றும் நெஞ்சில் நிறுத்தி ஆட்சி புரிந்த சான்றோர்கள். எடுத்துக்காட்டாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க்கையில் இதனைக் காணலாம். அவன் மிகவும் இளையனாயிருந்தபோது இருபெரு வேந்தரும் (சேரன், சோழன்) வேளிர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து, யாமே விழுமியம், பெரியம்: நம்மொடு பொரும் இவனும் இளையன்; கொள்ளத்தக்க கொள்ளை யும் பெரிது’ (புறம், 78) என்ற இகழ்ச்சிக் குறிப்புடன் இவனோடு பொருதனர். இங்ங்னம் சிறுசொல் பகன்ற சினங்கெழு வேந்தரை எதிர்த்துச் சென்று பொருவதற்கு முன் நெடுமொழி கூறுகின்றான் நெடுஞ்செழியன். "சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்குஅகப் படேஅ னாயின் பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன்எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி துாற்றும் கோலேன் ஆகுக'; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி