பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைக.என் நிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈய இன்மையான் உறவே" சிறுசொல் - புல்லிய வார்த்தை; சினம் - கோபம்; சமம் - போர்; சிதைய - சிதறும்படி; செல்நிழல்-சென் றடையும் நிழல்; கோலேன் - கொடுங்கோலன்; நிலை இய நிலை பெற: வரை - எல்லை; புன்கண் கூர . துயரம் மிக) என்ற பாடற் பகுதியில் இந்த வஞ்சினத்தைக் காணலாம். இவ்வாறு வஞ்சினம் கூறும் நெறியில் மூன்று கருத்து களைக் காணலாம். (1) தன்குடை நிழலில் வாழும் குடி மக்கள் தம் அரசன் கொடுங்கோலன்; தங்கட்குத் தக்க காவல் இல்லை என்று அழுது அரற்றிக் கண்ணிர் பரப்பிப் பழிதூற்றும் கொடுங்கோலை உடையனாதல் (2) உல கத்தோடு எஞ்ஞான்றும் நிலையுறும் புகழையும் தலை மையும் உடைய புலவர்கள் தன் நில எல்லையைப் பாடாது நீங்குதல் (3) இல்லை’ என்று வந்தோர்க்குக் கொடாத வறுமையைத் தான் அடைதல். இவற்றுள் முதற்கருத்தில் அரசன் நீதி வழங்குவதில் எவ்வளவு ஊற்றம் உடையவ னாக இருக்கின்றான் என்பதைக் காணலாம். இவ்வாறு திே வழங்கும் உணர்வு மலை நாட்டுக் காவ லன் சேரன் செங்குட்டுவனிடமும் இருந்ததைச் சிலப்பதி காரத்தால் அறியலாம். செங்குட்டுவன் தன் வீரப் படைத் தலைவனை நோக்கிக் கூறினான் வஞ்சினம். இமயத்தி னின்றும் தமிழகம் நோக்கித் தீர்த்த யாத்திரையாக வந்த முனிவர் ஒருவர் கனகன், விசயன் என்னும் இரு ஆரிய மன்னர் நம் தமிழரசர்களை இழிவாக இயம்பியதாகச் சாற் றினர். நிலைபேறில்லாத வாழ்க்கையை உடைய அம்மன் 41. புறம் - 72