பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 3.43 னர்கள் கூறிய இகழுரை நம்மை ஒத்த தமிழ் வேந்தர் அனை வருக்கும் இகழ்ச்சியைத் தருவதாகும். எனவே காவாத தாவினையுடைய அவ்வட நாட்டு அரசர்களின் தலைமீது கண்ணகித் தெய்வத்திற்குரிய கல்லையேற்றித் தமிழகம் மீளுவேன். அவ்வாறன்றி என் கூர்வாள் வறிதே திரும்பு மாயின், என் நாட்டின்மீது படையெடுத்து வரும் கொடிய மாற்றரசனை நடுங்கச் செய்யாது, என் ஆளுகைக்குரிய குடி மக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோலன் எனப் பெயர் கொள்வேனாக' என்று வஞ்சினம் கூறினான். இளங்கோ வாக்கில் இவை: இமயத் தாபதர் எமக்கிங் குணர்த்திய அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்; வடதிசை மருங்கின் மன்னன் முடித்தலைக் கடவுள் எழுதவோர் கற்கொண் டல்லது வறிது மீளும்என் வாய்வாள் ஆகில் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில் குடிநடுக் குறுாஉம் கோலேன் ஆக* என்பவையாகும். குடிமக்கள் நலத்தின் பொருட்டு செய்யவேண்டிய நல்லாட்சியைப் பற்றிய நினைப்பு இவன் நேஞ் சில் நிலைத்திருந்ததைப் பற்றி இதனால் அறிய முடிகின்றது. புழுப்போன்ற சாதாரண பிராணிகட்கும் மூளை {Brain) உண்டு. சாதாரணமாக ஒரு மனித மூளையின் எடை மூன்று இராத்தல்கள்; யானை மூளையின் எடை பத்து இராத்தல்கள்: திமிங்கல மூளையின் எடை பதினான்கு இராத்தல்கள். மனிதன் சிறந்த அறிவுடையவ னோக இருப்பதற்கு மூளையின் அளவிலிருந்து ஊகிப்ப 42. சிலப். கால்கோட் காதை, அடி 9.18