பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2莎盘 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பதைவிட மூளையின் எடைக்கும் உடலின் எடைக் முள்ள விகித அளவு சரியான கருத்தேற்றத்தைத் தருகின்றது. இந்த அளவு முறையே மனிதனுக்கு 1/50 உம், யானைக்கு 1500 உம், திமிங்கலத்திற்கு 1/10,000மும் உள்ளது. மூளை பல செயல்களுடன் கொள்வாய்களையும் Receptors) உடற்பாகங்களையும் ஒருமைப்பாட்டுடன் செயற்படச் செய்கின்றது. மனிதனுடைய மூளை எண்ணச் செல்வமுடையது. நல்லவற்றையும் தீயவற்றையும் சிந் திக்கும் செழிப்புடையது. தீயவற்றில் விரைந்து பாய்ந்து அதில் மூழ்கி நிற்கும் இயல்புடையது. நல்லது செய் தாலும் அல்லது செய்தாலும் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்திக்கொள்ளும் பாங்கு மனித னுடையது. படித்தவனாக இருந்தால் தான் செய்யும் தீய செயலையும் நியாயப்படுத்திக் காட்ட அறநூல்களி லுள்ள சில வாக்கியங்களைத் தேடி அவற்றைத் திரித்துப் பொருள் கூறி தன் செயலை நியாயப்படுத்திக் காட்டும். பாங்கு அவனுடையதாக இருப்பதைக் காணலாம். இதனைக் கடியும் முறையில் பாரதியார், தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது: பாவம் தொலையுது: படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோ!' என்றுபோவான்' என்று குடுகுடுப்பைக்காரன் வாயில் வைத்துக் காட்டுவார். இவ்விடத்தில், நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் (373) என்ற வள்ளுவர் வாய்மொழியும் நினைவிற்கு வருகின் றது. பாரதத்திலுள்ள பாத்திரங்களின் (கதை மாந்தர் களின்) குணங்களைப் பொதுமக்கள் கூட நன்கு தெரிந், திருந்தார்கள். அறவழி நிற்கும் பாத்திரத்திற்குத் தரும 43. பா. க. பல்வகைப்பாடல்கள்-புதியகோணங்கி-2