பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 25互 னும் மறவழி (தீயநெறியில்) நிற்கும் பாத்திரத்திற்குத் துரியோதனனும், சூதும் வாதும் வஞ்சகமும் நிறைந்த நெறியில் நிற்கும் பாத்திரத்திற்குச் சகுனியும் எடுத்துக் காட்டாக நிற்கின்றனர் என்பதை அவர்கள் நன்கு அறி வார்கள். வில்லியின் படைப்பைவிட,பாரதியின் பாஞ்சாவி சபதத்தில் அவர்களின் படைப்பில் தனிப்பட்ட ஒர் உயிர்த் தத்துவம் சோபிப்பதைக் காணலாம். துரியோதனன் தீய குணங்களை உடையவனாக இருந்த போதிலும் அவனை ஒரு வெறும் அயோக்கியனாகக் கவிஞன் படைக்கவில்லை. இந்தக் காவியத்தில் துரியோதனன் தனது மறத் தொழி லுக்கும் பொறாமைக்கும் ஓர் அரசியல் தத்துவத்தையே அடிப் படையாக வைத்துக் கொள்ள முயல்வதைக் காணலாம். திருதராட்டிரன் அவனுக்குப் பலவிதமான புத்திமதிகள் சொல்லுகின்றான். அவற்றிற்கு மறுமொழியாக அவன், 'மன்னர்க்கு நீதி ஒருவகை;-பிற மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை’’’

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குழைதல் என்பது மன்னவர்க் கில்லை; கூடக்கூடப்பின் கூட்டுதல் வேண்டும்; பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்: பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல்* வெல்வதெங் குலத்தொழி லாம்;-எந்த விதத்தினில் இசையினும் தவறிலைகாண்! நல்வழி தீயவழி - என நாமதிற் சோதனை செயத் தகுமோ? செல்வழி யாயினுமே - பகை தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்' 44. பா. ச. 1 , 11 : 87 45, шт. ғғ. 1. 18:1 00 46. டிெ. 1.13:101