பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பொருள் மூன்றினையும் கூறுவான் அவற்றை மும்முதல் பொருள் என்றான், அவையின்றி விடுபெறுமாறு வேறின் மையின் வீடும் ஆண்டுக் கூறினான் என்பது” என்ற பேராசிரியரின் உரைப்பகுதியால் ஆசிரியர் எடுத்தோதாதன் காரணத்தை அறியலாம். இந்த மூன்றினைத் தவிர அறி வுடைய மக்களால் விரும்பி மதிப்பதற்குரியன பிற இன் கையின் இம் மூன்றினையும் மும்முதற்பொருள் என்று ஆசிரி வர் சிறப்பித்துள்ளமை உய்த்துணரத்தக்கது. அறவழியில் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக் கனது விழுமிய நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு. மூன்று பகுதிகளாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் பகுதியினை மூன்றன் பகுதி” எனத் தொகுத்துரைப்பர் தொல்காப்பியர். வள்ளுவப் பெருந்தகையும் தொல்காப் வியரின் முறையையொட்டியே தம் நூலை அறம், பொருள், இன்பம் என முப்பால்களாக வகுத்தருளினார் என்பது ஈண்டு நோக்கி உணரத்தக்கது. இன்பநிலை, பொளிருயல்பு போன்றவற்றை விளக்குவது. போருத்தமின்மையால், அவற்றை ஈண்டு விளக்கவில்லை. இவை பற்றிய விளக்கத்தை என் பிறிதொரு நூலில்’ காணலாம். ஆசிரியர் மூன்றாவதாக நிறுத்திய அறம்: என்னும் முடிந்த பொருளை ஈண்டு ஆராய்வது பொருத்த முடையதாகும். அறமும் அன்பினையே முதலும் ஈறுமாகக் கொண்டு சட்டப்படுதலும் நுகரப் பெறுதலும், செய்யப் பெறுதலும் வேண்டும். என்பது தொல்காப்பியரின் கருத் தாகும். இது இன்பமும் பொருளும் என்ற நூற்பாவின் முதலிரண்டு அடிகளினால் இனிதுபெறப்படும். வள்ளுவப் பெருந்தகையும், 5. தொல்காப்பியம் காட்டும். வாழ்க்கை (மூன்றாம். பதிப்பு月。 (பழநியப்பா பிரதர்ஸ், 14 பீட்டர்ஸ்சாலை, சென்னை “G森姆·莎丑参J