பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்று தன் அரசியல் கொள்கைத் துளிகளைச் சிதற விடுகின்றான். இக்காலத்தில் மெக்கியவல்லி, ஹிட்லர், முஸ்ஸோலினி போன்ற அரசியல்வாதிகளை அறிந்த நமக்கு இவர்களும் துரியோதனனுக்கு முன் எம்மாத் திரம்? என்று எண்ணும்படி தோன்றுகின்றது. மன்ன ராட்சியில்தான் இத்தகைய தந்திரங்கள் கடைப்பிடிக் கப் பெற்றதென்றால் மக்களாட்சி நடைபெறும் இக் காலத்திலும் சில அரசியல்வாதிகள் (அமைச்சர்கள், சபா நாயகர்கள்) கடைப்பிடிக்கும் கொள்கைகளும் நடை முறையில் கையாளும் நெறிமுறைகளும் அறிஞர்களின் நெஞ்சினைக் கதிகலங்கச் செய்து விடுகின்றன. அண்மை அயில் (28-1-1988) தமிழகச் சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற அடாத அநாகரிகமற்ற செயல்கள் உலக நாடுகளின்முன் நாணித் தலைகுனியச் செய்து விட்டன. இச்செயல்களை விட இன்னும் கொடியவை. துரியோ தனன் அவையில் நடைபெற்றவை - இதிகாசக்கதையில் வருபவை - கற்பனையானவை-என்று தள்ளிவிடத்தக் கவை அன்று. உண்மையில் நடைபெறக் கூடியவை; அவற் றைத் தவிர்த்தலே அறம்-நீதி-என்பதற்காகவே கவிஞன் நமக்குக் காட்டுகின்றான். இவை முடியாட்சிக்காலத்தில் நடைபெற்றவை. அவையை அலங்கரிப்பவர்கள்-வீடுமன், விதுரன் போன்றவர்கள்-வாயிழந்து கண்திறந்த மெளனி களாய் வீற்றிருந்தனர். வீடுமாச்சாரியன், செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும் செய்கை அநீதியென்று தேர்ந்தாலும் சாத்திரந்தான் வைக்கும் நெறியும் வழக்கமுமே கேட்பதனால் ஆங்கவையும் நின்சார்பில் ஆகா வகையுரைத்தேன் தீங்கு தடுக்கும் திறமிலேன்' 47 : Lirr. F. 5. 27 : : 6 7 – 7 2