பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 25.3 என்று கூறி அந்த மேலோன் தலை கவிழ்ந்தான்.' இந்த அவையில் உள்ளவர்கள் அனைவரும் துரியோதனன் தாட் சண்யத்தால் மன்ற உறுப்பினர்களானவர்கள். ஆனால் தமிழகச் சட்டமன்றப் பேரவையின் அமைச்சர்கள், சபா நாயகர், உறுப்பினர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பெற்ற வர்கள். தேர்தல் வரும்போது இவற்றைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிப்போமா? மாட்டோம். இறைவன் தான் அனைவர்க்கும் வழிகாட்ட வேண்டும்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் அரசியலிலும் துரியோதனன் போன்ற ஒருவரே முதலமைச்சராக வர நேரிடுகின்றது. துரியோதனன் தனது அடாத கொள்கைகளைத் தெளி வாக வெளியிட்டான். ஆனால் இக்கால அரசியல் தலை வர்கள் ஏழைகட்கு உதவும் கொள்கைகள், திட்டங்கள்’ என்ற போர்வையில் பல அடாத செயல்களை மேற். கொள்வதைக் காண்கின்றோம். வள்ளுவர் கருத்து: நீதி வழங்கும் முறைபற்றிய தெளி வான கருத்தைத் திருக்குறளில் காணலாம். நேர்மையாக ஆட்சி புரிதல் என்பது நாம் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதல்ல. குடிகளைக் காப்பாற்ற முறை செய்யும்போது, அவர்களில் சிலரிடத்தில் குற்றம் காணும்போது தண்டிக்க வேண்டும். குற்றவாளிகட்குத் தண்டனை விதிக்காமல் பல மக்களைக் காப்பாற்ற முடியாது. பலரது நன்மைக்காக ஆட்சியில் சிலருக்குத் துன்பம் இழைக்கவும் நேரிடும்.புத்தர் கொள்கை நடைமுறை ஆட்சிக்கு ஒத்து வராது. அறத்துப் பாலில் அன்புடைமை பற்றித் தனக்குத் துன்பம் இழைத் தவர்கட்கும் தீமை செய்யாதிருப்பதே தலையாய அறிவு: என்றும், தீவினையச்சத்தில் மறந்தும் பிறன் கேடுகுழற்க’ என்றும் கூறியவை ஆட்சி முறைக்குத் துணைபுரிவதில்லை. இன்னும் பிறர்க்கு இன்னா செய்யாமல் வாழ்வதே தூயவர் துணிவு என்றும், இன்னா செய்தவர்களைத் தண்டிக்கும். முறை அவர்கள் தாமே நானும்படியாகப் பதிலுக்கு.