பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25会 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தன்மை செய்வதே என்றும் கூறியவையும் நடை முறையில் நீதி வழங்குவதில் துணைபுரிவதில்லை. தண்டனை வழங்கும் முறைகளில் கொலைத் தண்ட னையும் ஒன்று. மிகப் பொல்லாத குற்றவாளி களாக உள்ள ஒரு சிலரைக் கொலைத் தண்டனை வழங்கி ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும்போது கொல் லாமைப் பற்றிக் கூறும் கருத்துகள் நடைமுறையில் நீதி வழங்குவோருக்குப் பயன்படுவதில்லை. இவையெல்லாம் தனிவாழ்க்கை என்னும் முறைக்கு ஒதியவை என்று கொள்ளின் குழப்பம் நேரிடாது. தனிப்பட்டவன் தன் வாழ்க்கை கெடுவதானாலும் பிறருக்குத் தீமை விளைத்தலின்றி வாழவேண்டும் என்பதே வள்ளுவர் காட்டும் அறம். ஆனால் அவனே பொதுவாழ்க்கையில் பலரைக் காக்கும் கடமையில் உள்ளபோது, பொது வாழ்க்கை கெடுவதனாலும் பிறருக்குத் துன்பம் இழைத்தல் ஆகாது என்று கருதுவது அறியாமை; இது கடமை செய்வதில் தவறிய குற்றமும் ஆகும். ஆகவே, பொது வாழ்க்கை கெடாமல் சீர்பட வேண்டும் என்பதையே குறிக் கோளாகக்கொண்டு குற்றவாளிகட்குத் தண்டனை வழங் குதல் வேண்டும். அவ்வாறு தண்டிப்பது பழியும் அன்று; பாவமும் அன்று. அது தலைவனது தலையாய கடமையும் ஆகும். கொலைத் தண்டனை விதிப்பதும் அல்வாறே அவன் கடமையாகும்; அது பயிரைக் காப்பாற்றக் களை யைப் பிடுங்கி எறியும் உழவனுடைய தொழில் போன்றது. குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று; வேந்தன் தொழில் (549) கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல்பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (550) என்பவை தண்டனை வழங்குவதில் அவர் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கட்கும் நீதி வழங்கும் பொறுப்பி லுள்ளவர்கட்கும் காட்டும் ஒளி விளக்குகள் ஆகும்.