பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் நீதி 25.5 இப்போது கொலைத் தண்டனயைப் பல நாடுகள் ஒழித்து வருகின்றன. கொலைத் தண்டனையால் ஒருவன் வாழ்வை ஒழிக்கலாமே யன்றி அவனைத் திருத்த முடிவ தில்லையாதலால் அவனுக்குப் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் திருத்த முயல்வதே அரசின் கடமை என்று உச்ச நீதிமன்ற நடுவர்களும் கருதுகின்றார் கள். மேலும் கொலைத் தண்டனை நாகரிகம் இல்லாத பழங்காலத்தில் ஏற்பட்டது என்றும், இது இன்றைய மக் களின் நாகரிக உணர்ச்சிக்கே மாறுபட்டது என்றும் காரணங்கள் கூறுவர். ஆனால், இதற்கு நேர் மாறாகக் கருதும் அறிஞர்கள் நம் நாட்டிலும் உண்டு. மேல் நாட் டிலும் உண்டு. அவர்களுள் உலகப் பெரும்புகழ் பெற்ற எச். ஜி. வெல்ஸ் என்பவரைக் கூறலாம். குற்றவாளிகளில் திருந்தக் கூடியவர்கள் சிலர் என்றும், திருத்த முடியாத வர்கள் பலர் என்றும், திருத்த முடியாதவர்களை எத் தனை ஆண்டுகள் சிறையில் வைத்துக் காத்தாலும் "கொடிறும் பேதையும் கொண்டது விடா என்ப தாதலால் சிறிதும் பயன்படாது என்றும் மொழிகின் றனர். இவர்களை வறுமையாலும் வேறு சூழ்நிலையாலும் திருடின. இளங்குற்றவாளிகட்குரிய பள்ளிகளில் சேர்த்து அவர்களைத் திருத்துவது போல இந்தக் குற்றவாளி களையும் திருத்தலாம் என்று கருதுகின்றனர் போலும். இந்த ஒப்புமை சிறிதும் பொருந்தாது. சில ஆண்டுகட்கு முன்னர் தில்லி மாநகரில் ஓர் இளம்பெண்ணைக் கற் பழித்துக் கொன்ற பில்லாவும் அவன் நண்பன் ரங்காவும் போன்றவர்களையும், அதுபோலவே அண்மையில் விருகம் பாக்கத்தில் (சென்னை) ஒரே குடும்பத்திலுள்ள பலரை அதே குடும்பத்திலுள்ள ஒருவர் கொன்றாரே அவரைப் போன்றவரையும் திருந்துவார்கள் என நினைப்பது சிறிதும் பொருந்தாது. இத்தகைய சமூக விரோதிகளை. கொலைப்பாதகர்களை-விட்டு வைப்பதால் சமூகத்திற்கு மேலும் தீங்குகள் விளையுமேயன்றி நன்மை ஏற்படாது.