பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை தண்டனை குறையக் குறையக் குற்றங்கள் அதிகப்படுவ தையும் நாம் காண்கின்றோம். வயலில் களை எடுத்துப் பைங்கூழைக் காப்பது போல கொலையிற் கொடியாரை யும் சமூகத்திலிருந்து நிரந்தரமாகவே அகற்றிவிட வேண் டும் என்ற வள்ளுவர் பெருமானின் கருத்தே நடை முறைக்கு உகந்ததாகும் என்று கொள்வதே பொருத்த முடையதாகும். ஒருவரை நீண்டகாலம் சிறையில் வைத்திருந்தால் அவரிடம் எஞ்சியுள்ள மக்கட்பண்பும் கெட்டு விடுகின்றது. என்றும் இவ்வாறு தண்டிக்கப் பட்டவர்கள் கெடுவதுடன், அவர்களைக் காவல் காக்கும் அலுவலர்களும் பண்பு இழந்து கெட நேர்கின்றது என்றும் ஒரு சிறந்த கருத்தும் நிலவுகின்றது. இக்கருத்துப்படிச் சிறையில் வைத்து அவர் களுடைய மனத்தை முற்றிலும் பாழ் படுத்தி அவர்களின் உயிரைக் காப்பதை விட அவர்களின் உயிரைப் போக்கி விடுவதே சிறந்தது என்றும் மற்றொரு கருத்து முதற் கருத்துக்குத் துணை செய்கின்றது. வள்ளுவர் கருத்து இதற்கு அரண் செய்வது போல் அமைகின்றது. இறை பெறும் நெறி; திருவள்ளுவர் பொருள் செயல் வகையை ஒதும்போது அறத்தை நன்கு வற்புறுத்து கின்றார். செய்யும் திறம் அறிந்து தீமை இல்லாத வழியில் சேர்ந்த பொருளாக இருத்தல் வேண்டும்; அந்தப் பொருள் அறம் பயக்கக் கூடியதாகவும் இன்பம் பயக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் (7.54). அந்தப் பொருள் அருளோடும் அன்போடும் வந்த பொருளாக இருக்க வேண்டும்; அருள் இல்லாமல் அன்பு இல்லாமல் பொருள் சேர்ப்பது கூடாது; அவ்வாறு சேரும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிட வேண்டும் என்று வற்புறுத்துவார் (755) கூடிவரும் வள்ளுவர் பெருமான். அருளொடும் அன் புடனும் கூடிவரும் பொருள் என்பதனை ஆறிலொன்றாய்