பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 2む7 வருதல் வேண்டும் என்பதைத் தென்புலத்தார் தெய்வம்" (43) என்ற குறளுரையில் விளக்குவார் பரிமேலழகர். மேலும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் அவ் வாறு செய்யாத பொருளிட்டம் பசுமட்கலத்து நீரைப் பெய்து அதனைக் காப்பதோடொக்கும் என்று கூறுவார். சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண், கலத்துநீர் பெய்தீஇ யற்று(360) (சலம் - தீயவினை; ஏமமார்த்தல் . ஏமத்தை (காப்பு) அடையப் பண்ணுதல்) என்ற வள்ளுவத்தைக் காண்க. இவ்வாறு செய்தால் அரசனும் பொருளும் ஒரு சேரப் போய் விடுவர் என்பது கருத்து. தனிப்பட்ட முறையிலும் சரி, அரசுமுறையிலும் சரி பொருளிட்டும் துறையில் தூய்மை வேண்டும் என் பதை வற்புறுத்துவதற்காகவே பொருள் செயல்வகை’ என்ற அதிகாரத்தில் மட்டும் அல்லாமல் வினைத்துய்மை’ என்ற அதிகாரத்திலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி யுள்ளார். பெற்ற தாய் பசித்துன்பத்தால் வாடுவதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாதென்றும் (656), பழியை மேற்கொண்டு ஆக்கம் பெறுவதைவிட வறுமையே உயர்ந்தது என்றும் (657), பிறர் வருந்தும்படியாக ஈட்டிய பொருள் எல்லாம் ஈட் டியவரே வருந்தும்படியாகப் போய்விடும் என்றும் (659) விளக்கியுள்ளதை ஈண்டுச் சிந்தித்தல் தகும். அரசனின் கடமை (குடியரசு ஆட்சியில் அமைச் சனின் கடமை) குடிமக்களைப் புரத்தல். இவர்களின் நலம் கருதிக் காவல் படை, போர் சார்ந்த படை போன்ற அமைப்புகளை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின் றது. இதற்கு ஆகும் செலவைக் குடிமக்கள் ஏற்க வேண்டியவராகின்றனர். இத்தகைய செலவிற்காகவே வரி (Tax) விதிக்கப்பெறுகின்றது. இந்த வரி குடிமக்களைப் த. இ. அ.-17