பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை புரத்தல் காரணமாக எழுந்தமையால் அது புரவு" எனப் பட்டது. அஃது அரசன் குறித்த காலத்தில் மக்களிடம் இறுக்கப்பட வேண்டியதானமையால் இறை' என்றும் பெயர் பெற்றது. அரசன் தன் கடமைகளைச் செவ்வனே செய்வதற்கு முழுத்துணை புரிந்தமையின் கடமை என்றும் இயம்பப் பெற்றது. பாண்டியன் அறிவுடைநம்பி தன் குடிகளிடத்து இறை வாங்கும் நெறியில் பெருந்தவறு செய்தான். இவன்பால் சூழ்ந்த அரசியல் சுற்றத்தார் இவனை இடித்துரைத்து தெறிப்படுத்தும் நேர்மையற்ற வராயினர். புனல் செல்லும் வழி புல் சாய்ந்து கொடுப்பு பதைப்போல் இவன் விழைந்த வழியெல்லாம் நுழைந்து கொடுத்து அரசியலில் வாழும் மக்கட்குத் துன்பமுண் டாக்கினர். மக்கள்பால் மன்னனுக்கு அன்பு சுருங்குவ தாயிற்று. குடிகளை மிக வருத்தி இறை வாங்குவதில் விருப்புடையவனானான். இதனைக் காணப் பொறாத சான்றோர் பிசிராந்தையாரை அரசன்பால் விடுத்து நல் லறிவு கொளுத்துமாறு வேண்டினர். அவரும் அவர்களின் வேண்டுகோட்கிணங்கி பாண்டியனைச் சென்று கண்டு அவனை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியை ஆந்தை தையாரே பாடிய பாடல்: காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே மாநிறை வல்லதும் பன்னாட் காகும்; நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குனினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும்; வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதட கெடுக்கும் பிண்ட நச்சின் 49. புறம் - 75 (குடி புரவு இரக்கும்...சிறியோன்) 50. பாலகா. திருவவதாரம்-112(இறை தவிர்ந்திடுக)