பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 259 யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே" Iமா - நில அளவு: செறு - நில அளவு: யாத்து-ஈட்டி: நந்தும் - தழைக்கும்; வைகலும்-நாடோறும் வரிசை தரம் கல்என - ஆரவாரத்தையுடைய பரிவு - அன்பு: தப - கெடுக்க பிண்டம் - பொருள் தொகுதி, நச்சின்விரும்பினால், புலம் - வயல்) - என்பது. களிற்றியானைக்கு உணவாகும் நெல் அது விளையும் நிலத்திலிருந்து கொணரப்பட்டுக் கவளம் கவள் மாகக் கொள்ளப்படுமாயின் விளைச்சல் ஒருமா அளவினும் குறைந்ததாயினும் பல நாட்கள் அக்களிற்றியானைக்கு உணவு தர வல்லதாகும். யானைக்கென்று நூறுமா நிலத்தை விட்டு நெல் விதைத்து, அது விளைந்து சாய்ந்து கிடக்கையில் அதனைத் தனியே மேயவிடின் யானையின் வாய் புகுவதனைக் காட்டிலும் கால்களால் கெடுவது மிகுதியாகும். இவ்வாறே வேந்தனும் தான் பெறுதற் குரிய அரசிறையை நெறியறிந்து முறையே கொள்வா னாயின், நாடு பெருவளம் படைத்துச் செல்வத்தால் புகழ் பெறும்; அவ்வேந்தன் நாடோறும் வரிசையறியும் திறம் இல்லாத சுற்றம் சூழத் தானும் மெல்லியனாய்க் குடிகள்பால் அன்பின்றி மிக்க இறையை வாங்கலுறு வானாயின், யானை புக்க விளை நிலம் போல, அவற்கும் பொருள் சேராது; நாடும் கெட்டழியும்' என்று செவியறி. வுறுத்துள்ளதைப் பாடலில் காணலாம். இப்பாடலில் நில அளவுபற்றிய குறிப்பு உள்ளது. மா, குழி, வேலி என்பன நில அளவை வகை. இருபது மா கொண்டது. ஒரு குழி, நூறு குழி கொண்டது ஒரு வேலி. செய் என்பது ஒரு தளை. கோடி என்பது மிக்கதோர் அளவினைக் குறிப்பது. 51. புறம்-184