பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛翰彝 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை இற்ை பெறும் நெறிபற்றி நலங் கிள்ளி என்ற அரசனே கூறுவதை இன்னொரு பாடலால் அறிய முடிகின்றது. சோழன் நலங்கிள்ளி காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி யிடமிருந்து உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கி கிருந்து அரசு புரிந்து வருகையில், ஒரு சமயம் சான் றோர்கள் பலர் அவன் திருமாளிகையில் கூடியிருக்கும் வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. அப்பொழுது அரசு முறை: யான இயல்பு பற்றிய பேச்சு எழுந்தது. * மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பது அக்கால நியதில் யாகையால் அதற்கு ஊறு நேரா வண்ணம் காத்தலின் இடுக்கண் பல நேரிடும் என்று கூறுவார் பலராயினர். "தந்தைக்குப் பின் அரசு முறை அவன் வழிவரும் மூத்த மகனுக்கு வருவது முறையினையுடையது. அதனை எய்தி னோன் இவ்வுலகில் பெருஞ்சிறப்பு எய்தி விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிமக்களை இரந்து பொருளிட்டக் கருதினானாயின் அவனுக்கு அரசு முறை பொறுத்தற்கரிய பெருஞ்சுமையாய்விடும். உரிய கடமையைக் குடிமக்கள் தாமே நல்குவராயின், கையிகந்த கடமை வாங்கும் வேந்தன் செயலைக் குடிபுரவு இரக்கும். சிறியோன்' என்கின்றான். குடிபுரவு-குடிமக்களைப்புரத் தற் பொருட்டுப் பெறும் கடமை. மிக்க ஆண்மையே வேந். தற்கு வேண்டப்படுதலின், அஃதில்லாதானைக் ‘கரில் ஆண்மைச் சிறியோன் என்றான். பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைய சீரியோன் பெறுவ னவாயின், தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்துச் சிறிய தண்டாகிய் வெளிய கிடேச்சினது (நெட்டியினது): கோடைக்கண் உலர்ந்த கள்ளியைப் போலப் பெரிதும், நொய்ந்து ஆகிவிடும்’ என்று நலங்கிள்ளிகூறுவானாயினன். புறம் 75 இக் கருத்தினைச் சித்திரித்துக் காட்டுகின்றது. இறுக்கும் இறையின்றி மிக்க இறை விதித்து வாங்கும் கொடுமையை வெறுத்து வஞ்சினங் கூறுவானாய் பாண் டியன் நெடுஞ்செழியன்,