பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் - 9 அறத்திற்கே அன்பு ... " சார்பென்ப அறியார் (78). என்று ஒதியுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கி உணர. எனவே, உண்மையன்பு இன்றி யாதாவது ஒரு கருதி ஆற்றும் அறம் நன்மை பயவாமை நன்கு அ. படும். இங்ஙனம் பயன் கருதி அறம் செய்வார் தமது: கைப் பொருளாலன்றிப் பிறரது பொருளாற் செய்: கும் துணிவர். ஆண்டியை அடித்துத் தாதனுக்குக் கொடுப்பதும், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள் as arum (53.65 a sol rolgjo (Robbing the Peter and Paying to the Paul) இன்று நாம் பல துறைகளில் காணும் காட்சியாகும், எல்லா உயிர்களிடத்தும், எல்லா மக்களி: டத்தும் நெகிழ்ந்த அன்பு கொண்டு, எவ்வுயிர்க்கும், எவர்க்கும் தீங்கு நேராத் முறையில் பெயர் புகழை வேண்டாது அறம் செய்வதே செய்வோர்க்கும் பிறர்க்கும் உண்மையில் பயன்படுவதாகும். அன்றியும், தொல்காப்பி யனார் அறம்' என்பதை ஒன்றாகக் கூறினாரேயன்றி அதனை 'இல்லறம் துறவறம் என்று இரண்டாகப் பகுத்து யாண்டும் ஒதினாரில்லை. அவர், இம்மை இன்பம் விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோடு ஒருங்கிருந்து நடத்திய அன்பு வாழ்க்கையும், மறுமை இன்பம் அவாவி மனைவி மக்கள் தமக்குத் தொண்டு செய்ய இம்மை முயற்சியினின்று நீங்கி இறைவன் திருவருளில் தமது உணர்வினைத் தோய்வித் திருக்கும் தவ வாழ்க்கையும் ஒர் அறத்தினுள்ளேயே அமைந்த இருவகை நிலைகளாகும் என்ற கருத்துடையவர். காமஞ் சான்ற கடைகோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே? 7 கற்பியல் (இளம்) g