பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை (பொருத்தம் - இலக்கணம்; அருத்தம்-பொருள்: அதுகாலமறிந்து கொள்ளுதல்.) வண்டுகள் யூமொட்டுகளை அவற்றில் தேன் இல் லாதது கண்டு ஊதிச் சிதையாது. அவை தேன் நிறைந்து மலர்ந்த காலத்தில்தான் தேனை எளிதாக உண்ணும். அதுபோல அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்க வேண்டும் என்பது பாடலின் கருத்து. இன்னொரு பாடலும் வரி தண்டலைப் பற்றியதே. பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம் கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால் பால்தலைப் பாலூறல் இல்.’ (பாற்பட்டு - கட்டுப்பட்டு; மேற்பட்டகூட்டு - தமக்குச் சேரவேண்டிய மிக்க இறைப் பொருளை; மிகநிற்றல்-நீண்ட நாட்கள் நிற்றல்; கோல்தலை - அரிந்த தாளின் தலையி: லுள்ள(நெல்); காணுங்கால் - ஆராயுமிடத்து; பால்தலைபால் உள்ள இடம் (ஆவின்மடி); ஊறல் - சுரத்தல்) ஆவின் பாலைக் கறவாது சில நாட்கள் விட்டு வைத்தால் பால் வற்றிப் போகும். இறைப் பொருள்களை குடிமக் களிடத்து நிறுத்தி வைத்து நீண்ட நாட்கள் சென்ற பின்னர் அவற்றைப் பெற நினைப்பின் அது முடியாது போகும்: அவர்கள் அவற்றைச் செலவு செய்து விடுவர். பாலைக் காலமறிந்து கறவாதது ஆவின் குற்றமன்றிக் கறவாதவன் குற்றமாதல் போல இதுவும் அரசனது குற்றமாகும். ஆகவே அரசன் இறைப் பொருளைச் சுணங்காமல் சிறிது சிறிதாகக் காலமறிந்து கொள்ள வேண்டும் என்பது: பாடலின் கருத்து. சென்னை குடிநீர்-கழிவுநீர் வாரியத்தில் எவ்வளவோ வரிகள் கொடுபடாது நிற்கின்றன. நடையாய், 55. பழமொழி - 245