பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 26。 நடந்து ஓயாது எழுதி கழிவுநீர் வரியை (3; ஆண்டுகட்கு) விதிக்கச் செய்து கட்டினேன், குடிநீர் வாரியத்தில் என் முயற்சி இன்னும் பலிக்க வில்லை. பொருள் செயல் வகையை ஒதும்போது வள்ளுவர் பெருமான் அறத்தை நன்கு வற்புறுத்துகின்றார். செய்யும் திறன் அறிந்து தீமையில்லாத வழியில் சேர்த்த பொருளாக இருக்க வேண்டும்; அந்தப் பொருள் அறம் பயக்கக் கூடிய தாகவும் இருக்க வேண்டும் (7.54); அருளொடும் அன் பொடும் வந்த பொருளாக இருக்க வேண்டும். அருள் இல்லாமல் அன்பு இல்லாமல் பொருள் சேர்ப்பது கூடாது; அவ்வாறு சேரும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விட வேண்டும் (755) என்று வற்புறுத்துவார் அப்பெருந் தகை. பொருள் ஈட்டும் துறையில் தூய்மை வேண்டும் என்று வற்புறுத்துவதற்காகவே இப்பெருமகனார் பொருள் செயல் வகை என்ற அதிகாரத்திலல்லாமல் வினைத் தூய்மை என்ற அதிகாரத்திலும் இந்தக் கருத்தை வலி யுறுத்துவார். பெற்ற தாய் பசித்துன்பத்தால் வாடுவதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாது என்றும் (856), பழியை மேற் கொண்டு ஆக்கம் பெறுவதை விட வறுமையே உயர்ந்தது என்றும் (557), பிறர் வருந்தும் படியாக ஈட்டிய பொருள் எல்லாம் ஈட்டியவரே வருந்தும் படியாகப் போய் விடும் என்றும் (659), தீவினையால் பொருள் செய்து காத்தல் பச்சை மண்கலத்துள் நீர் பெய்து அழிய வைப்பது போன்றதே என்றும் (660) விளக்கியுள்ளதை ஈண்டு நாம் உளங் கொள்ள வேண்டும். நாடாளும் அரசனுக்கு உரியபொருள் இன்னது என் பதையும் அறுதியிடுகின்றார் வள்ளுவர் பெருமான். உறு பொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள (756) |உல்கு - சுரங்கம்1